ஸ்துதி ஸதகம் ! ஸ்ரீ மூகபஞ்சசதீ !
கனஶ்யாமான் காமாந்தக மஹிஷி காமாக்ஷி மதுரான்
த்ருʼஶாம் பாதானேதானம்ருʼத ஜலஶீதானனுபமான் ।
பவோத் பாதே பீதே மயி விதர நாதே
த்ருʼடபவந்-
மனஶ்ஶோகே மூகே ஹிமகிரிபதாகே கருணயா ॥ 54॥
மன்மத சத்ருவான பரமசிவனின் பத்நியே ! ஹிமயமலையின் கொடிபோன்றவளும் ,லோகநாதையாய் இருக்கிற காமாக்ஷியே ! மேகம் போல் கருத்தவையும் ,இனியவையும் ,அமிர்தஜலம் போல் குளிர்ந்தவையும் ,இணையற்றதாயுமுள்ள கடாக்ஷ வீக்ஷணங்களை ஸம்ஸார ஸங்கடத்தில் பீதியடைந்து மனசோகமுள்ளவனும் , ஊமையாயுமிருக்கிற என்னிடம் கருணையால் வீசுவாயாக !
மன்மதன் வைரி…..
பல்லவி
மன்மதன் வைரி சிவபெருமான் நாயகியே
மின்னல் கொடியிடையாளே காமாக்ஷியுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
இன்னலிடர் களையும் கேசவன் சோதரி
கன்னலே இமவான் வெற்றிக் கொடியே
சரணம்
கன்னங்கரிய மேகம் போலும்
இன்னும் குளிர்ந்த அமுதமெனத் திகழ்
உன்னுடைய கடைக்கண் பார்வையை ஏழையேன்
என் மீது வைத்தென் பவபயம் தீர்ப்பாய்
No comments:
Post a Comment