மனமெனும் மாயை
குதிரைகளே உங்களைப்போலென்னால்
வேகமாக ஓட முடியாது
பறவைகளே உங்களைப் போலென்னால்
விண்ணில் பறக்க இயலாது
ஆமைகளே உங்களைப்போலென்னால்
மிக நிதானமாகச் செல்ல முடியாது
ஆனல் உங்களை விட சிறந்தது என் மனது
என் மனத்தால் குதிரைகளை விட விரைந்தோட முடியும்
பறவைகளை விடப் பாய்ந்து செல்ல இயலும்
நினைத்தால் ஆமையைவிட மந்தமாக இயங்கமுடியும்
கண்டம் விட்டுக் கண்டம் நொடியில் சென்றிடும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் நினைதவுடன் தாவும்
ஒளியையும் ஒலியையும் விஞ்சும் வேகம் கொண்டது
படைத்தவனையே காணும் பாக்கியம் கொண்டது
முயன்றால் இயலாதென்பதெதுவும் மனதிற்கில்லை
No comments:
Post a Comment