தேவி உனையே…
.
பல்லவி
தேவி உனையே மனமாரத் துதித்தேன்
சோட்டானிக்கரை பகவதியே மாயே
அனுபல்லவி
பாவியென் பழவினைப் பயன்கள் நீங்கிட
கூவியழைத்துன் கருணை வேண்டினேன்
சரணம்
மாவிடை வாகனன் நாயகி நீயே
கோவிந்தன் கேசவன் துணைவியும் நீயே
தேவியர் மூவருக்கும் மூத்தவள் நீயே
தூவி மலர் சொரிந்துன் திருவடி பணிந்தேன்
அம்மே நாராயணா தேவி நாரயாணா
லக்ஷ்மி நாராயணா பத்ரே நாராயணா
No comments:
Post a Comment