ஸிதிலித தமோ ஜாலாம் நீலாரவிந்த விலோசனாம்
தஹந விலஸத் பாலாம் லீலா கதாச்ரித காஞ்சிகாம் |
கரத்ருத லஸத் சூலாம் காலாரி சித்தஹராம் பராம்
மநஸிஜ தநு: ஸாலாம் ஏலாலகாம் ஸமுபாஸ்மஹே || 39
அக்ஞான இருளை நீக்குகிறவளும்,கருநீதல் புஷ்பத்திற்கு ஸமமான நேத்ரங்களையுடையவளும்,அக்நியால் விளங்குகிற நெற்றியுள்ளவளும் ,விளையாட்டு நடையாக காஞ்சி அடைந்தவளும்,சூலாதாரிணியும், கால சத்ருவான சிவனுடைய மனதை ஆகர்ஷிக்கிறவளும் , மன்மதனுடைய ஆயுத சாலையாயும் ,ஏலம் போல் வாசனையுள்ள கேசமுள்ளவளுமான காமாக்ஷியை உபாஸிக்கிறோம் .
கனிந்தருள்….
பல்லவி
கனிந்தருள் புரிந்திடும் காமாக்ஷியைத் துதித்தேன்
பனிமலை நாதன் மனங்கவர் ஈச்வரியை
அனுபல்லவி
முனிவரும் தேவரும் கடவுளரனைவரும்
அனுதினம் வணங்கிடும் கேசவன் சோதரியை
சரணம்
கனிவு தரும் கருநீலக் கண்களுடையவளை
கனலினை நெற்றியில் வைத்திருக்கும் வனிதையை
இனிய ஏலமணக் கருங்கூந்தலழகியை
காமனின் பாணமும் சூலமுமேந்தியே
துரிதம்
மன இருள் நீக்கும் திறனுடையவளை
புனித காஞ்சியில் வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment