*ஆதிசங்கரர் அருளிய
ஆனந்தலஹரீ*
முகே தே தாம்பூலம் நயனயுகலே கஜ்ஜலகலா
லலாடே காச்மீரம் விலஸதி கலே மௌக்திகலதா I
ஸ்புரத்காஞ்சீ சாடீ ப்ருகடிதடே ஹாடகமயீ
பஜாமி த்வாம் கௌரீம் நகபதி கிசோரீமவிரதம் II
உனது வாயில் தாம்பூலமும், இரு கண்களிலும் மையெழுத்தும், நெற்றியில் கஸ்தூரிதிலகமும், கழுத்தில் முத்துமாலையும் விளங்குகிறது. உனது இடையில் தளதளக்கும் ஒட்டியானத்துடன் வஸ்திரம் பிரகாசிக்கிறது. மலையரசன் மகளான உன்னை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
இமவான் மகளே….
பல்லவி
இமவான் மகளே உனையே துதித்தேன்
உமா மகேச்வரி கேசவன் சோதரி
அனுபல்லவி
கமல மலரேந்தும் கரமுடையவளே
சமமாயொருவரும் இல்லாதவளே
சரணம்
தாம்பூலம் தரித்த திருவாயுடனும்
ஆம்பல் மலர்க்கண்ணில் கரிய மையுடனும்
நெற்றித்திலகமும் முத்துமாலையுமணிந்து
இடையில் ஒட்யாணமும் பட்டுடையும் கொண்ட
No comments:
Post a Comment