கருடன் மீதேறி…..
பல்லவி
கருடன் மீதேறிக் காத்திட வருவாயே
தருணமிதுவே திருமாலே கேசவா
அனுபல்லவி
திருமகளைத் திருமார்பில் வைத்திருப்பவனே
திருப்பாற்கடல்தனில் படுத்திருப்பவனே
சரணம்
கமலநாபனே கமலக்கண்ணனே
கமலாசனனும் சனகாதி முனிவரும்
அமரரும் அமரேந்திரனும் நாரதரும்
கரம் பணிந்தேத்தும் திருமலைவாசனே
சமுத்திர ராஜனின் இனிய மருமகனே
அமரருக்கமுதளித்த மோகனக் கண்ணனே
சமமென தனக்கொருவரில்லாதவனே
உமையாள் சோதரனே திருமலைவாசனே
No comments:
Post a Comment