ஆடியில்…..
பல்லவி
ஆடியில் ஆடி வருந்தேனே அம்பிகையே
நாடி வருவோர்க்கு நல்லருள் புரிபவளே
அனுபல்லவி
பாடிப் பரவசித்தேன் உனது லீலைகளை
ஈடிணையில்லாத கேசவன் சோதரி
சரணம்
தேடி வரும் பக்தருக்கு நலமனைத்துமருள்பவளே
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியும் கலைமகளும்
கூடிக் குலவிடும் குலமகளே மலைமகளே
ஓடி வந்து எனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்
No comments:
Post a Comment