பொற்பதம்…….
பல்லவி
பொற்பதம் பணிந்தேன் கலியுகத் தெய்வமே
கற்பகமே எனைக் காத்தருள்வாயே
அனுபல்லவி
சிற்பரன் கபாலீசனிடமமர்ந்த தாயே
சற்குணமுடைய கேசவன் சோதரி
சரணம்
விற்பன்னரும் வேத சாத்திர நிபுணரும்
நற்பெயர் தந்து போற்றிப் புகழ்ந்திடும்
அற்புதமே அழகே சயிலேந்திரன் மகளே
நற்கதி பெறவே நாளுமுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment