ஸ்துதி ஸதகம் ! ஸ்ரீ மூகபஞ்சசதீ
அனாத்யந்தா : காசித் ஸுஜன நயனானந்த ஜனநீ
நிருந்தானா காந்திம் நிஜருசி விலாஸைர் ஜலமுசாம் ।
ஸ்மராரே : தாரல்யம் மனஸி ஜனயந்தீ ஸ்வயமஹோ
கலத் கம்பா ஶம்பா பரிலஸதி கம்பா பரிஸரே ॥ 43 ஆதியந்தமில்லாததும், நல்லோர் விழிகட்கு மகிழ்வைத் தருவதும், தனது ஒளிப் பரவலால் மேகங்களின் ஒளியைத் தடை செய்கிறதாயும் , மன்மதன் மனதில் சலனத்தை உண்டாக்குகிறதும் , அசைவற்றதுமான ஒரு மின்னலானது (காமாக்ஷி) கம்பை நதிக்கரையில், ஸ்வதந்திரமாக (மேகமில்லாமல்) விளங்குவது ஆச்சரியமாக உள்ளது !
கம்பாநதிக் கரையில்….
பல்லவி
கம்பாநதிக் கரையில் வீற்றிருப்பவளே
அம்பிகையே காமாக்ஷி உனையே துதித்தேன்
அனுபல்லவி
அம்புலி பிறையணிந்த கேசவன் சோதரி
சும்ப நிசும்பரை வதம் செய்த ஈச்வரி
சரணம்
ஆதியந்தமில்லாத சோதியே
மின்னொளியைவிட ஒளி மிகுந்தவளே
மன்மதன் மனதை ஆட்டுவிப்பவளே
என் மனம் புகுந்தெனை ஆட்கொண்டவளே
No comments:
Post a Comment