வரலஷ்மி……
பல்லவி
வரலக்ஷ்மி பணிந்தேன் உனதிரு
சரணகமலங்களை ஶ்ரீ…..
துரிதம்
நரர் சுரர் நாரதர் நான்முகன் சுரபதி
கரம் பணிந்தேத்தும் பரதேவதையே
அனுபல்லவி
கரங்களில் கமலமலர் வைத்திருக்கும்
பரம க்ருபாகரி கேசவன் துணைவி
சரணம்
வரந்தரும் கரமும் அபயகரமும் காட்டும்
திரிபுரசுந்தரியே அகில லோக நாயகியே
சராசரங்களனைத்தையும் காத்திடும்
பராசக்தியே காத்தருள்வாயே
No comments:
Post a Comment