ஸ்துதி ஸதகம் ! ஸ்ரீ மூகபஞ்சசதீ
மரகதருசாம் ப்ரத்யாதேஸம்
மஹேஸ்வர சக்ஷுஷாம்
அம்ருதலஹரீ பூரம் பாரம் பவாக்ய
பயோநிதே : |
ஸுசரிதபலம் காஞ்சீபாஜ : ஜனஸ்ய பசேளிமம்
ஹிம ஸிகரிண :வம்சஸ்ய ஏகம்
வதம்ஸமுபாஸ்மஹே || 31
மரகத பச்சையின் காந்திக்கு எதிரியாயும் ,பரமசிவனுடைய கண்களுக்கு அம்ருத தாரையின் ப்ரவாஹமாயும் ,ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்திற்கு கரையாயும் ,
காஞ்சீயில் இருக்கிற ஜனங்களுக்கு
பக்குவமான புண்ணிய பலம் போன்றதாயும் ,ஹிமபர்வதத்தினுடைய சந்ததிக்கு முக்கியமான அலங்காரமாகிற காமாக்ஷியை உபாஸிக்கிறோம் .
பரமேச்வரியை…..
பல்லவி
பரமேச்வரியைக் கேசவன் சோதரியை
கரம் பணிந்தருள் வேண்டி அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
அரனயனரியும் அமரரும் முனிவரும்
சுரபதி ரதிபதி அனைவரும் வணங்கிடும்
சரணம்
மரகதப் பச்சை நிறத்தை விட பசுமையாய்
பரமசிவன் கண்களுக்கு அமுத தாரையுமாய்
கரையென சம்சாரக் கடலுக்கு விளங்கிடும்
இமவான் மகளை காஞ்சி காமாக்ஷியை
No comments:
Post a Comment