நாராயணனே
பல்லவி
நாராயணனே உனையே பணிந்தேன்
நாரதர் துதித்திடும் ஆராவமுதனே
அனுபல்லவி
ஓராயிரம் பெயர் உடைய மதுசூதனனே
ஶ்ரீ ராமனும் நீயே கண்ணனும் நீயே
சரணம்
ஆதி கேசவனே அனந்த சயனனே
மாதினை மார்பினில் வைத்திருக்கும் திருமாலே
நாத சங்கீதக் கலைகளை ரசித்திடும்
ஏதமிலாத மாலனே மாதவனே
பாதி மதியணிந்த சிவனும் நான்முகனும்
வேதியரோதும் மறைகளும் மற்றும்
சனகாதி முனிவரும் அமரருமிந்திரனும்
பூதலமனைத்தும் போற்றி வணங்கிடும்
No comments:
Post a Comment