கோபால பாலனை…..
பல்லவி
கோபால பாலனை மனமாரத்துதித்தேன்
ஆபால பூபாலன் அவனியோர் போற்றும்
அனுபல்லவி
மாபாதகம் செய்த கம்சனை வதைத்தவனை
மாபலியின் கர்வம் மூவடியால் தீர்த்தவனை
சரணம்
ஆபத்திருளறச் செய்த மாமாயனை
கோபர்களின் குறைதீர்த்த மாதவனைக் கேசவனை
நாபிகமலந்தனில் பிரமனை வைத்திருப்பவனை
கோபியர்கள் கொண்டாடும் ஶ்ரீபத்ம நாபனை
No comments:
Post a Comment