அம்பிகையே ! உன் கேசமானது மணமுள்ள பூக்களின் வாசஸ்தலம். உன் பாத தூளியோ தேவர்களின் அடைக்கலம் ஆகவும் உள்ளது. உன் சிரிப்பின் ஒளியானது மந்தாரப் பூக்களைப் போல் வெண்மை நிறத்தில் ப்ரகாசிக்கிறது. உன் பாதச் சிலம்புகளோ மெதுவான மந்த்ர சப்தங்களைப் போல ஒலிக்கின்றன. கலஹம் ஸமேத்ய கலஹம்ஸமேத்ய என இரண்டு வித அர்த்தமுடைய ப்ரயோகம் கவியின் சிலேடை வர்ணனையை எடுத்துரைக்கிறது.
மேலும் சௌந்தர்ய லஹரியில்
ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ-மாஸாநுஸத்ருஸீம்
அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்
பொருள்: தேவி! உன் பாதக்கமலங்கள் எப்போதும் ஏழை, எளியவர்க்கெல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவற்ற செல்வத்தைத் தந்தருள்பவை. அதிகமான அழகிய மகரந்தத் தேனைப் பெருகியோடச் செய்பவை. கற்பகத் தருவின் பூங்கொத்துப் போலுள்ளவை. இத்தகைய உன் பாதக்கமலங்களில், ஐம்புலன்கள், மனம் ஆகிய ஆறு கால்களுடன் புகுந்து உறையும் வண்டின் தன்மையை என் ஜீவன் அடைவதாக!என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்....
அம்பிகையே……
பல்லவி
அம்பிகையே உன் மலர்ப்பதம் பணிந்தேன்
நம்பித் துதிப்பவர்க்கு அருள் தரும் ஶ்ரீலலிதா
அனுபல்லவி
செம்பொன்னரங்கன் கேசவன் சோதரியே
சம்புவும் பிரமனும் திருமாலும் வணங்கிடும்
சரணங்கள்
மணமுள்ளபூக்களின் இருப்பிடமுன் கருங்குழல்
அணங்குன் பதகமலம் தேவர்கள் அடைக்கலம்
கணகணக்கும் சிலம்பொலி மந்திர ஓசைகள்
அணிகலனுனது வெண்ணிறப் புன்னகை
பொருள் தரும் கற்பகத்தருவுன் திருப்பதம்
அருள் தேன் சுரந்திடுமுன் பாதகமலங்களை
ஐம்புலனுடனென் மனமும் சேர்ந்து
ஆறு கால் வண்டாகி அடைக்கலம் வேண்டினேன்
No comments:
Post a Comment