“மாய பிம்பம்”
கண்ணாடியில் பார்த்தேன்
ஆம் முகம் தெரிந்தது
அடிக்கடி பார்க்கும் என் முகம் தான்
சற்றே வயதாகிவிட்டதோ,
கண்ணாடிக்கு வயதாவதில்லை, எனக்குதான்
அங்குமிங்கும் சின்னச்சின்ன சுருக்கங்கள்
கோடி முறை பார்த்தாலும் ஆடி பொய்சொல்லாது
முகம் மட்டும் தான் காட்டும் மனம் காட்டாது
ஆம், தீர்மானம் சரியே, இனி கண்ணாடி பார்க்கத் தேவையில்லை
No comments:
Post a Comment