Tuesday, 3 August 2021

வடிவாம்பாள் நீயே….

 வடிவுடையாள் செய்த வளைகாப்பு:!!

அர்த்தஜாம பூஜை முடிந்தும் ஏனோ ஆலயத்தினுள் சலசலப்பு!! வேணுவன நாதருடன் பொன்னுசல் ஆடிக்கொண்டிருந்த சாலீவாடீஸ்வரீ சற்றென்று நிமிர்ந்தாள்!! வடிவு!!  என்னடீ ஆச்சு!! நாதனின் கேள்விகளையும் பொருட்படுத்தாமல்!! கிழக்கு திசை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் நெல்லை நகர் நாயகி!! ஏந்நா!! பார்த்தேளா அங்க?! பேறுகாலம் நெருங்கியும் தனக்கு ஸீமந்தம் பன்ன யாருமில்லை னு தவிக்கிறாளே!! அந்த அபலை உங்களுக்கு தெரியலையா!! நேக்கென்னமோ உன்ன தவிர்த்து வேறு பொம்மனாட்டியே தெரியமாட்டீங்கிராடீ உமா!! வேணுவன நாதர் சற்று குறும்புடனே கூறினார்!! போறும்!! போறும்!! எப்பவும் இந்த உமா நினைப்பு தான் உங்களுக்கு போங்கோ!! தன் நாதனுக்கு தெரியாதவாறு தன் இதழோர புன்னகையை மறைத்து பள்ளியறையை விட்டு ஆலய மத்யத்தில் வந்தாள்!! வடிவாம்பிகை!! 

அம்பா!! வடிவாம்பா!! நேக்கு ஸீமந்தம் பன்னிக்கனும் ஆசை!! என் தாயவே உன்ன நினைச்சு பூஜை பன்னனே இந்த பக்தைகுரல் நோக்கு கேட்க்கலயோ மா?! ஏற்கனவே அவளை நினைத்துக் கொண்டிருந்த வடிவழகிக்கு அவள் ப்ரார்த்தனையை கேட்டதும் இன்னும் அவள் மேல் கருணை பொங்கியது!! உனக்கு ஸீமந்தத்த நா முடிக்கிறென்டீ!! குழந்த!! சாலீவாடீஸ்வரீயின் பேச்சைக் கேட்ட வேணுவந நாதர் மெல்லியதாய்  சிரித்தார்!! ஏன்டீ வடிவு!! ஸீமந்ததிற்கு இஷ்ட மித்ர பந்துக்கள்! பொம்மனாட்டிகளெல்லாம் சேர்ந்து தானே பன்னுவா?! நீ தனியா போய் என்ன பன்னபோறே!! மேலும் பலமாக சிரித்தார் வேணுவந நாதர்!! 

அத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த வடிவாம்பா    திடீரென்று சீரினாள்!! இதோ முடிச்சு காட்றேன்!! பாருங்கோ!! என்னடீ இது இந்த அர்த்தஜாமத்துல?! மீனாக்ஷி கேட்க பதில் சொன்னாள் வடிவு!! அங்க பாரென்டீ!! என் பக்தை ஸீமந்தம் பன்னிக்கனும் ஆசை பட்டு என் ஸன்னதியிலயே தபஸிருக்கா!! 

சரிடீ!! நாமரெண்டு பேர் போய்?!மத்தவாளையும் கூப்பிடு!! எங்கடீ!! இந்த அபிராமி?! ஸுப்ரமண்ய பட்டரோட அந்தாதிலயே தன்ன மறந்து நின்னுட்டாளோ?! என்னடீ இந்த நேரத்தில அதெல்லாம் நா சொல்றேன் முதல்ல புறப்படு!! மீனாக்ஷி அவசரபடுத்த புறப்பட்டாள்!! அபிராமி!! அதுசரீ  இந்த பர்வதவர்த்தினி?! ஸ்ரீ ராமனோட பூஜாக்ரமத்தில மயங்கி  ராமநாதனோட இவளும் உட்கார்ந்துட்டாளோ?! ஏன்டீ கத்தறேள் தோ வந்துட்டேன்!! இந்த நீலா!! அவளுக்கு தான் விவாஹம் ஆகலையே டீ!! விவாஹம் ஆகலைனாலும் அவகிட்ட விஷயம் இருக்கு!! நித்தமும் ஸமுத்ரத்த பார்த்து இவளுக்கு மனுஷாள பார்க்க நேரமில்லாம போச்சு போல?! தோ வந்துட்டேன்!! நாகை நீலாயதாக்ஷீயும் கிளம்ப!! ஆனைக்கா அகிலம்!! ஸதா சிவபூஜை செய்து செய்து  நம்மையெல்லாம் மறந்துட்டா போல!! அகிலம்!! அகிலம் வாயேன்டீ!!  மீனாக்ஷி அழைக்க ஆனைக்கா அகிலாண்டமும் வந்துசேர்ந்தாள்!!  திருவாரூர்ல ஒருத்தி இருக்காளேடீ!! ஆமா ஆமா!! கால் மேல கால்போட்டு கமலாலயத்தையே ராஜ்யம் பன்றவோ!! அவளையும் கூப்டுங்கோடீ!! மீனாக்ஷி கூற அழைத்தாள் காந்திமதி!!  மூலாதாரத்தில் காந்திமதி!! சஹஸ்ராரத்தில் கமலாம்பிகை!! என  ஏழு தேவீயருமே ஏழுசக்ரங்களில் உறையும் க்ஷேத்ர நாயகிகள்!! காந்திமதியே அனைவருக்கும் மூத்தவளாக வர மற்ற தேவீயர் இளைய சஹோதரிகளாக வர வடிவுடை நாயகியாம் காந்திமதியின் திருச்சந்நிதி முன்பே ஸீமந்தம் நடந்தேறியது!! ஆடிப்பூரத்திலே அண்டத்தையே பிண்டமாக தாங்கி ஸீமந்தம் நடத்திக்கொள்ளும் பராஸக்தி இப்பொழுது தன் பக்தைக்காக தானே வந்து ஸீமந்தம் செய்கிறாள்!!  "கருணாரஸ ஸாகரா" எனும் லலிதா சஹஸ்ரநாமத்தையும் தாண்டி "கருணாம்ருத ஸாகரா" எனும் த்ரிஸதீயின் நாமம் காந்திமதிக்கு எவ்வளவு பொருத்தமானது!!  காந்திமதியை விட கருணைமிகு தெய்வம் கலியுகத்தில் உண்டோ!!


                                                                       வடிவாம்பாள் நீயே….

                                                                               பல்லவி

                                                          வடிவாம்பாள் நீயே வளையடுக்க வருவாயே

                                                          அடியே காந்திமதி உனைத் தஞ்சமடைந்தேன்

                                                                                 அனுபல்லவி

                                                          கொடியவினைகளைத்  தீர்த்தருளும் மலைமகளே

                                                          துடியிடையாளே கேசவன் சோதரியே

                                                                                   சரணங்கள்

                                                          அடி வயிறு பருத்து மாதங்களாயின உன்

                                                          மடி வைத்து படுத்திட என் மனம் விழையுதே

                                                          கொடியிடை நாயகியே கூப்பிடுவாய் மீனாக்ஷியை

                                                          விடியும் வரை காக்காமல் அழைத்திடு அபிராமியையே


                                                          உடன் வரச்சொல்லந்த பர்வத வர்த்தனியை                                                         

                                                          பிடிவாதம் விடுத்தந்த அகிலாண்டவல்லியையும்

                                                          பொடிநடையாய் வரச்சொல் நீலாயதாக்ஷியையும்

                                                          நடத்திடுவாய் சீமந்தம் ஶ்ரீ லலிதாம்பிகையே

                                                                        

No comments:

Post a Comment