முருகா……
பல்லவி
முருகா முருகா என்றழைத்தேனே தேனே
திருமால் கேசவன் மருகா எனைப் பாராய்
அனுபல்லவி
ஒரு தரம் மனமுருகி அழைத்தாலும் போதும் நீ
வருவாயென்றுந்தன் அடியார் உரைத்தது பொய்யோ
சரணம்
இருவினைப் பயனகல வருமிடர் நீங்கிட
அறுமுகன் உனையே மனமார தினம் துதித்தேன்
வருவாயெனக்கருள நீலமயில் மீதேறி
பெருமைக்குரிய சிறுவாபுரி அரசே
No comments:
Post a Comment