#ஆரோக்கியத்திற்கு சுவாமி மலை🌹. #உறவிற்கு திருப்பரங்குன்றம்🌹
#பொருளாதாரத்திற்கு சோலைமலை🌹 #பாதுகாப்புக்கு திருச்செந்தூர்.🌹
#ஆளுமைக்கு திருத்தணி🌹 #ஞானம் பெற பழனி மலை🌹
மலைமேல்…..
பல்லவி
மலைமேல் நின்றருளும் கலியுக க்கடவுளை
சிலையாக நின்றாலும் எனைக்காக்கும் முருகனை
ம.காலம்(துரிதம்)
சுரபதி ரதிபதி சரச்வதியின்பதி
பசுபதி நரர் சுரர் போற்றிப் பணிந்திடும்
அனுபல்லவி
அலைகடல் மேல் துயிலும் கேசவன் மருகனை
மலைமகள் மைந்தனை வள்ளி மணாளனை
சரணம்
பொருள் பெற சோலைமலை உறவிற்குப் பரங்குன்றம்
ஆரோக்கியம் பெற சுவாமி மலை ஆளுமைக்கு
திருத்தணிகை மலையும் ஞானம் பெறப் பழனியும்
காவலுக்குச் செந்தூரும் எனக்கருளும் ஆண்டவனை
No comments:
Post a Comment