*ஆதிசங்கரர் அருளிய
ஆனந்தலஹரீ*
க்ருதக்ஷீரத்ராக்ஷ மதுமதுரிமா கைரபி பதை:
விசிஷ்யாநாக்யேயோ பவதி ரஸநாமாத்ரவிஷய: I
ததா தே ஸெளந்தர்யம் பரமசிவத்ருங்மாத்ரவிஷய:
கதங்காரம் ப்ரூம:ஸகலநிகமாகோசரகுணே II
நெய், பால், திராக்ஷ, தேன் இவற்றின் இனிமை இவை ஒரு சில வார்த்தைகளால் சிறப்பித்துக் கூற இயலாது;அது சுவைக்கும் நாக்கிற்கு மட்டுமே இலக்கானது. அதுபோல, ஹே தேவி!வேதங்களனைத்திற்குமே எட்டாத குணங்கள் உடையவள் , உனது அழகு என்பது பரமசிவன் ஒருவன் கண்ணுக்கு மட்டுமே இலக்கானது. ஆகவே நான் எப்படி சொல்ல முடியும்?
பரமேச்வரியே…..
பல்லவி
பரமேச்வரியே உனதழகு வடிவம்
பரமேச்வனின் பார்வைக்கே உரியது
அனுபல்லவி
பரம்பொருள் நீயே கேசவன் சோதரி
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனையே பணிந்தேன்
சரணம்
பால் நெய் திராட்சை தேனின் சுவையை
சொல்லால் வர்ணிக்க இயலுமோ அதுபோல்
நால் வகை மறைக்குமெட்டாக் குணமுடையவளே
உன்னெழிலெந்தன் வார்த்தையிலடங்குமோ
No comments:
Post a Comment