புன்னை நல்லூர் மாரி…..
பல்லவி
உன்னையே துதித்தேன் ஸ்ரீ க்ருஷ்ண மாரி
என்னைக்காத்தருள்வாய் ஸ்ரீ க்ருஷ்ணமாரி
அனுபல்லவி
பன்னக சயனன் கேசவன் சோதரி
பன்னகாபரணனிடம் கொண்ட ஈச்வரி
சரணம்
அன்னை நீயே அனைத்துலகிற்கும்
இன்னருள் தந்திடும் அகிலாண்டேச்வரி
முன்னைப் பழவினைப் பயன்கள் நீங்கிட
நின்னைச்சரணடைந்தேன் ஸ்ரீ க்ருஷ்ணமாரி
அரவினையணிகலனாயணிந்திருப்பவளே
நரர்சுரர் பணிந்தேத்தும் ஸ்ரீ க்ருஷ்ணமாரி
கருணைக் கடலே ஸ்ரீ க்ருஷ்ணமாரி
கருநிறத்தழகே ஸ்ரீ க்ருஷ்ணமாரி
புன்னைநல்லூர்தனில் கோவில் கொண்டிருப்பவளே
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே
கன்னலே தேனே கற்பகத் தருவே
உன்னருள் தந்தருள் ஶ்ரீ க்ருஷ்ணமாரி
No comments:
Post a Comment