ஶ்ரீ நீலோத்பலாம்பிகே……
பல்லவி
ஶ்ரீ நீலோத்பலாம்பிகே…… ( அம்ப )
மலர்ப் பதம் பணிந்தேன் எனக்கருள்வாயே
அனுபல்லவி
தேனினுமினிய மொழியுடையளே
ஆநிறை மேய்க்கும் கேசவன் சோதரி
சரணம்
நானிலம் போற்றும் தியாகராஜரின்
மேனியின் இடமமர்ந்த திரிபுரசுந்தரியே
மானின் மருண்ட விழியுடையாளே
கூனல் பிறயணிந்த ஶ்ரீநகர நாயகியே
துரிதம்
வானுறை அமரரும் அமரேந்திரனும்
கானுறை முனிவரும் பிரமனும் முருகனும்
பானுவும் மதியும் காமனும் கணங்களும்
யாவரும் வணங்கிடும் உலக நாயகியே
No comments:
Post a Comment