ஸ்துதி ஸதகம் ! ஸ்ரீ மூகபஞ்சசதீ !
ஊரீ குர்வன்னுரஸிஜதடே சாதுரீம்பூதராணாம்
பாதோஜாநாம் நயன யுகலே பாரி பந்த்யம்விதன்வன் ।
கம்பாதீரே விஹரதி ருசா மோகயன் மேகஶைலீம்
கோகத்வேஷம் ஶிரஸி கலயன் கோऽபிவித்யா விஶேஷ: ॥ 63॥
கம்பா தீரத்தில் காமாக்ஷிதேவி, பர்வத மலையைப் போலக் கடினமான ஸ்தனங்களின் சோபையையும், தாமரை புஷ்பம் பொறாமைப்படக்கூடிய அழகிய கண்களையும், கருத்து இருண்ட மேகக்கூட்டத்தைத் தனது ப்ரகாசத்தால் மங்கச் செய்து வெற்றிகொண்டும், தலையில் சக்ரவாக பக்ஷியின் எதிரியான சந்திரனைத் தாங்கியும் ஒரு வித்யா ஸ்வரூபமாக விளையாடுகிறாள்/விளங்குகிறாள். சக்ரவாகப் பறவைகள் இரவில் இணை பிரிந்து வருந்துகின்றன என்பது இலக்கியங்களின் கூற்று. சூர்யோதயம் ஆனவுடன் சக்ரவாகப் பறவைகள் மகிழ்ச்சி அடைகின்றன. அவை சூரிய கிரணங்களை கண்கொட்டாத தங்கள் நன்றிப் பார்வைகளால் ஆராதனை செய்வது போலவும், தங்கள் இனிய குரல்களால் வெகு அழகாக பாராட்டுவதைப் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுகிறது, என இலக்கியங்கள் வர்ணனை செய்கின்றன. இதனால் சந்திரன் சக்ரவாகப் பறவைகளின் எதிரி என கவிகள் கூற்றை மூககவி இங்கே அழகாகப் பயன்படுத்தியுள்ளார்.
அம்பிகையே…..
பல்லவி
அம்பிகையே காமாக்ஷி கேசவன் சோதரி
கம்பா நதிக்கரையில் இருப்பவளே உனைப்பணிந்தேன்
அனுபல்லவி
உம்பரும் சனகாதி முனிவரும் நான்முகனும்
சம்புவும் சுரபதியும் ரதிபதியும் வணங்கிடும்
சரணம்
மலை போல் திரண்ட தனமுடையவளே
மலர் கமலம்தனப் பழிக்கும் விழியுடையவளே
தலையில் சக்கரப் பட்சியின் வைரியாம்
நிலவின் கலையணிந்த கருங்கூந்தலுடையவளே
No comments:
Post a Comment