காரணம் வேண்டுமோ….
பல்லவி
காரணம் வேண்டுமோ நாரணனுனைத் துதிக்க
ஆரணப் பொருளே ஆதி கேசவனே
அனுபல்லவி
சாரதியாயன்று பார்த்தனுக்குத் தேர் நடத்தி
பாரதப் போரினில் பாண்டவர்க்குத் துணை நின்றாய்
சரணம்
ஶ்ரீ ரகு ராமனாய்ப் பாரினில் அவதரித்து
கோர அரக்கர்களின் கொடிய பகை முடித்தாய்
மாரனையீன்றவனே மதுசூதனனே
யாரென்ன சொன்னாலென்ன உன் புகழைப் பாட
No comments:
Post a Comment