அம்புலி பிறையணிந்த…..
பல்லவி
அம்புலி பிறையணிந்த தும்பிக்கையான் பாதம்
நம்பித் துதிப்போர்க்கு நலமனைத்தும் தருவான்
அனுபல்லவி
கும்ப முனிக்கருள்செய்த கரிமுகன்
எம்பெருமான் சென்ன கேசவன் மருகன்
சரணம்
நல்வாக்கும் கல்வியும் ஞானமும் புகழும்
செல்வமும் நல்வாழ்வும் அனைத்துமளித்திடுவான்
வல்வினையறுத்து நல்வினை சேர்த்திடுவான்
அல்லலிடர் களைந்து இகபரசுகமளிப்பான்
No comments:
Post a Comment