நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள்உடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்* சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்* போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்*
ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
சங்கமுமாழியும்…
.
பல்லவி
சங்கமுமாழியும் கையிலேந்தும் கேசவனே
பங்கமிலா உந்தன் மலர்ப்பதமே துதித்தேன்
அனுபல்லவி
மங்கையை மார்பணியாய் வைத்திருக்கும் மாலவனே
பொங்கரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
அங்கங்கள் ஜந்தளித்து என்னை ஆட்டுவித்தாய்
அங்குமிங்கும் தறிகெட்டு அவையோட முடியாமல்
தங்கியுன் திருவடி நிழலில் நின்றிடச்செய்ய
தேரழுந்தூரம்மானே என்றும் நீயே துணை
No comments:
Post a Comment