தேசுடைய…..
பல்லவி
தேசுடைய திருமாலே திருவேங்கடமுடையானே
கேசவனுனையே பாடிப் பணிந்தேன்
அனுபல்லவி
பேசும் தெய்வமாய்த் திருமலையில் நின்றருளும்
மாசிலாமணியே பாற்கடல் வாசனே
சரணம்
காசினியோர் போற்றும் கலியுக க்கடவுளே
ஆசா பாசத்தளைகளை களைபவனே
வாச மலர் தூவி அனுதினம் துதித்தேன்
ஈசனே அலமேலு நேசனே அருள்வாயே
No comments:
Post a Comment