பரமஹம்சரின்….
பல்லவி
பரமஹம்சரின் புகழ்பாடிப் பணிந்தேன்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நேர் நின்று வணங்கி
அனுபல்லவி
அரனயனரியவர் என்றே துணிந்தேன்
சுரர் நரரிந்திரன னைவரும் போற்றும்
சரணம்
பரம்பொருளும் கேசவனும் மாதவனுமவரே
நர ஜென்மமெடுத்து சாகசங்கள் புரிந்தவர்
சரத்கால மேகமாய் குளிர் நிழல் தருபவர்
அரவணைத்துப் பணிபவரின் வருமிடர் களைபவர்
No comments:
Post a Comment