ஶ்ரீ ஜகதீச்வரி…..
பல்லவி
ஶ்ரீ ஜகதீச்வரி துர்கா தேவி
பாதாரவிந்தம் பணிந்திடுமெனக்கருள்வாய்
அனுபல்லவி
ஶ்ரீ ஜகந்நாதன் கேசவன் சோதரி
ஆதாரம் நீயே அகிலமனைத்திற்கும்
சரணம்
தேஜோமயமானவளே தேவி சநாதனி
காமனைக் காத்தவளே காமேச்வரியே
பூமண்டலம் போற்றும் புவனேச்வரியே
பவ வினை தொலைந்திட உனையே துதித்தேன்
No comments:
Post a Comment