அச்சுதனுமவனே……
பல்லவி
அச்சுதனுமவனே கேசவனுமவனே
நச்சரவணை துயிலும் நாராயணனுமவனே
அனுபல்லவி
பச்சைமா மலைபோல் திருமேனியுடையன்
மச்சமாயவதரித்த நச்சினார்க்கினியனவன்
சரணம்
துச்சாமாயரக்கரையழித்தவனுமவனே
மெச்சி ஊரார் புகழும் மாயக் கண்ணனுமவனே
சச்சிதானந்தம் தரும் பரம்பொருளுமவனே
இச்சகம் போற்றும் மலையப்பனுமவனே
No comments:
Post a Comment