17.அசேஷப்ரஹ்மாண்டப்ரலய விதிநைஸர்கிகமதி:
ச்மசாநேஷ் வாஸஸீந:க்ருத பஸிதலேப:பசுபதி: I
ததௌ கண்டே ஹாலாஹலமகில பூகோலக்ருபயா
பவத்யா:ஸங்கத்யா:பலமிதி ச கல்யாணி கலயே II
நல்லதையே எண்ணியும் செய்தும் பழக்கமுள்ள ஹே தேவி!இந்த பசுபதியாகப்பட்டவர். அனைத்து பிரம்மாண்டத்தையும் அழித்து விடுவதை இயல்பாகக் கொண்டவர். அதற்கேற்றபடி சுடுகாட்டில் வசிப்பவர். விபூதி பூசுவர்-அத்தகையர் அனைத்துலகின்பால் கருணாயால் ஆலகால விஷத்தை தன் கழுத்தில் தங்க வைத்தாரென்றால், அது உன் உடனிருக்கையின் பயனாக நிகழ்ந்ததெனக் பயனாக நிகழ்ந்ததெனக் கருதுகிறேன்.
சாம்பவி சங்கரியுன்……..
பல்லவி
சாம்பவி சங்கரியுன் கருணையினாலன்றோ
அம்புவியழியாத சம்பவம் நடந்தது
அனுபல்லவி
பாம்பணை துயிலும் கேசவன் சோதரி
வேம்பை விரும்பும் அம்பிகையே ஈச்வரி
சரணம்
சாம்பலைப் பூசி இடுகாட்டில் திரியும்
பாம்பணிந்த சிவன் சம்ஹாரமூர்த்தி
தாமுண்ட நஞ்சை கண்டத்தில் இருத்தி
பூமண்டலம் முதல் அனைத்தையும் காத்ததும்
No comments:
Post a Comment