ஏனிந்தப் பிறவி……
பல்லவி
ஏனிந்தப் பிறவி எனக்களித்தாய் ஶ்ரீ ராமா
நானிலத்திலுனை போல நானும் அல்லல் படவோ
அனுபல்லவி
மானிடப் பிறவி யெடுத்து நீ பட்ட துயர்
ஜானகி நாயகனே உனக்குத் தெரியாதா
சரணம்
கானிடை திரிந்து வாழ்நாளை வீண் செய்தாய்
மானின் பின் சென்று மாயையில் வீழ்ந்தாய்
கூனியின் சூழ்ச்சியால் மணி முடி துறந்தாய்
தீனதயாபரனே கேசவனே எனக்கருள்வாய்
No comments:
Post a Comment