அவிநாசிப்பனை……
பல்லவி
அவிநாசியப்பனை மனமாரத்துதித்தேன்
புவி போற்றும் ஈசனைக் கேசவன் நேசனை
அனுபல்லவி
கவிபல புனைந்து செவி குளிரப் பாடி
அவனருள் வேண்டியே அவன் தாள் வணங்கி
சரணம்
சிவநேச ச்செல்வர் சுந்தரரின் சொல் கேட்டு
முதலை வாய் சென்ற சிறுவனை மீட்டுத் தந்த
சிவபெருமானை கருணாம்பிகை நாதனை
பவ வினைப் பயன்களை நீக்கிட வேண்டியே
No comments:
Post a Comment