ஜகதம்பிகையே……
பல்லவி
ஜகதம்பிகையே பதமலர் பணிந்தேன்
புகலென நம்பியே உனை தினம் துதித்தேன்
அனுபல்லவி
இகபரமிரண்டிலும் நீயேயென் துணை
ஜகம் புகழ் ஈச்வரியே கேசவன் சோதரி
சரணம்
மகபதியும் ரதிபதியும் சரச்வதியின் பதியும்
சுகசனகாதியரும் அமரரும் வணங்கிடும்
அகிலாண்டேச்வரியே அன்னையே ஶ்ரீலலிதே
சுகபாணியே உமையே காத்தருள்வாயே
No comments:
Post a Comment