ஸ்துதி ஸதகம் !ஸ்ரீ மூகபஞ்சசதீ !
ஆதூன்வந்த்யை தரல நயனைராங்கஜீம்வைஜயந்தீம்
ஆனந்தின்யை நிஜபதஜுஷா மாத்த காஞ்சீபுராயை ।
ஆஸ்மாகீனம் ஹ்ருʼதயமகிலை ராகமாநாம்ப்ரபஞ்சை:
ஆராத்யாயை ஸ்ப்ருʼஹயதிதராமாதிமாயைஜனன்யை ॥ 72॥
காஞ்சிபுரத்தில் வசிப்பவளும், கண்ணுக்குத் தெரியாத மன்மதனின் அழகிய கொடிக்கு சவால் விடும், இங்கும் அங்கும் அலையும் அழகான கண்கள் உடையவளும், தன்னைச் சரணடைந்தவர்களை அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி மகிழ்விப்பவளும், வேத பிரிவினரான மும்மூர்த்திகள் உட்பட்ட தேவர்கள் அனைவராலும் வழிபடக்கூடிய கூடியவளும், புராதனமானவளுமான அன்னை ஸ்ரீ காமாக்ஷியை என் மனம் நாடுகிறது.
காஞ்சிபுர நாயகி….
பல்லவி
காஞ்சிபுர நாயகி காமாக்ஷி உனைத்துதித்தேன்
வாஞ்சையுடன் பக்தருக்கு வரமருளுமம்பிகையே
அனுபல்லவி
பாஞ்ச ஜன்யம் முழங்கும் கேசவன் சோதரி
காஞ்சனமாலையின் அன்புச் செல்வி
சரணம்
மூவருக்கும் மூத்தவளே முன்னைப் பழம் பொருளே
தேவரும் மறைகளும் துதித்திடுமாதி சக்தியே
கவர்ந்திடுமலைபாயும் அழகு விழியுடையவளே
சிவன் வைரி காமனைப் பழிக்கும் எழிலுடையவளே
No comments:
Post a Comment