கண்டீக்ருʼத்ய ப்ரக்ருʼதி குடிலம் கல்மஷம்ப்ராதிபஶ்ரீ-
ஶுண்டீரத்வம் நிஜபதஜுஷாம்ஶூன்யதந்த்ரம் திஶந்தீ ।
துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருʼஷ்டி ப்ரதாத்ரீ
சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ர சூடால சூளி॥ 74॥
தன்னைச் சரணடைந்த பக்தர்களின் இயற்கையிலேயே குரூரமான பாவங்களை போக்கடித்து, ஞானத்தை அள்ளிக் கொடுப்பவளும், துண்டீரம் என்கிற உயர்ந்த நகரத்தில் தங்க மழையை பொழிந்தவளும், சண்டி என்ற பெயருள்ள ஸ்ரீகாமாக்ஷி சந்திரனை அழகிய ஆபரணமாக தனது தலையில் சூடியுள்ள பரமசிவனிடம் அளவற்ற அன்பை செலுத்துகிறாள்.
சரணடைந்தோர்….
பல்லவி
சரணடைந்தோர் நலன் காக்கும் அன்னையே காமாக்ஷி
பரகதியருளும் பரம் பொருள் நீயே
அனுபல்லவி
அரனயனரியும் அமரருமிந்திரனும்
கரம் பணிந்தேத்தும் கேசவன் சோதரி
சரணம்
துண்டீர நகரில் தங்க மழை பொழிந்தவளே
சண்டி ஓங்காரி மாகாளி பைரவி
வெண்ணிலவின் பிறையை ஆபரணமாயணிந்த
வெண்ணீறு பூசிய சிவன் மனம் கவர்ந்தவளே
No comments:
Post a Comment