Tuesday, 30 September 2014

தாயார் (மகாலட்சுமி )

         

           தாயார் (மகாலட்சுமி )


             பல்லவி

      தாயுனையே தஞ்சமடைந்தேன்

      மாயே மரகதமே கேசவன் துணைவியே

               அனுபல்லவி

        ஓயாதுனையே மனமாரத்துதித்திடும்

        சேயெனைக் காத்தருள இதுவே தருணம்

                சரணம்
       
        நீயே அனைத்து வேதங்களின் சாரம் 

         நீயே மூவுலகிற்கும்  ஆதாரம்

         நீயே தேவரும் மூவரும்  பணிந்திடும்

          மாயா மய  மந்திர  ரூபம்

         




       

கடிகை பக்தவத்சலன்


              கடிகை பக்தவத்சலன் 



                பல்லவி

          அக்காரக்கனியை ஆதிகேசவனை

         திருக்கடிகைத் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

                   அனுபல்லவி

            எக்காலத்தெந்தையை பக்த வத்சலனை

            முக்தியளிப்பவனை முகுந்தனை மாதவனை

                       சரணம்

             சக்தியளித்திடும் அம்ருதவல்லி உடனிருக்கும்

             பக்த சகாயனைப்  பரம தயாளனை

             சக்கரக் கையனை  ஆராவமுதனை

             குக்குடக் கொடியோன் சரவணன் மாமனை






Nammazhvar

எக்காலத்ெதந்ைதயாய் * என்ᾔள் மன்னில் * மற்ᾠ
எக்காலத்திᾤம் * யாெதான்ᾠம் ேவண்ேடன் **
மிக்கார் ேவத * விமலர் விᾨங்கும் * என்
அக்காரக் கனிேய * உன்ைன யாேன


Excerpt From: "Thiruvaimozhi Tamil"

திருவேங்கடமுடையான்



         திருவேங்கடமுடையான் 

          பல்லவி

        பரிபூரணனைக்  கருணாகரனை

        அரி கோவிந்தனை மனமாரத் துதித்தேன்

              அனுபல்லவி

         திரிவிக்கிரமனை  உலகளந்த பெருமாளை

         சரிநிகர் சமான மில்லாத கேசவனை

                 சரணம்

         விரிகமலமலரேந்தும் திருமகளை மார்பில்

         தரித்திருப்பவனை ஏழுமலையானை

         மரித்தலும் பிறத்தலுமில்லாமல் செய்து

         பரிந்தருள் புரிந்திடும் வேங்கடமுடையானை

         

Monday, 29 September 2014

கற்பகாம்பிகை



            கற்பகாம்பிகை 


              பல்லவி

          அம்ப பரதேவதே உன் மலரடி பணிந்தேன்

           சம்பு கபாலீசன் மனங்கவரீச்வரி

               அனுபல்லவி

           அம்புலி பிறையணிந்த கற்பகாம்பிகையே

            நம்பெருமாள் கேசவன் சோதரி  மாயே

                      சரணம்

              தும்பிமுகன் கணபதியும் சிங்காரவேலனும்

              அன்புடன் வணங்கிடும்  அன்னையே கௌரி

               உம்பர் முனிவர் பணி உமாமகேஸ்வரி

               வெம்பவக் கடலினைக் கடந்திட வேண்டியே


திரிபுர சுந்தரி




   

                 திரிபுர சுந்தரி 


                      பல்லவி

           உனையன்றி  எனக்கருள வேறு யாருள்ளார்

           கனகமலைதனில் வீற்றிருப்பவளே

                அனுபல்லவி

            மனத்திலுன் பதமலர் தனையே நினைத்து

            அனவரதமுமுன் நாமமே துதித்தேன்

                   சரணம்

             வனமாலையணிந்த   கேசவன் சோதரி

             அனங்கனும் நாணும் அழகுடையவளே

             வனவிலங்கெனவே புலன்வழி செல்லுமென்

             மனக்குரங்கை அடக்கி பவ பயம் போக்கிட

           

             

வழித்துணை விநாயகன்



     வழித்துணை  விநாயகன் 


     பல்லவி

     வணங்கினேன்  வழித்துணை விநாயகனை

     மணம் கமழ் மலர்மாலை மணி மாலையணிந்தவனை

       அனுபல்லவி

     பிணங்கிய குறமகள் வள்ளியை  முருகன்

      மணந்திட உதவிய  ஆனை முகத்தோனை

         சரணம்

       அணங்குகள் சித்தியும் புத்தியும் பிரமனும்

       கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்

       பணிந்திடும் கணபதியைக் கேசவன் மருகனை

       தணலேந்தும் நெற்றிக் கண்ணன் சிவன் மகனை




        Beautiful Ganesha @ highway restaurant !
     


Sunday, 28 September 2014

பாத கமலங்கள்


  பாத கமலங்கள் 


  பல்லவி


பாத கமலங்களே  துணையென துதித்தேன்

மாதவா கேசவா  மனங்கனிந்தருள்வாய்


   அனுபல்லவி


 வேத புராணங்கள் சாத்திரங்கள் போற்றும்

  யாதவகுல திலகா கோவிந்தா உனதிரு


     சரணம்

   சாதித்த புண்ணியரும் சுகசனகாதியரும்

   ஆதித்தனம்புலியும் அமரரும் பிரமனும்

   பாதி மதியணிந்த சங்கரனும் இந்திரனும்

   பூதலத்தோரனைவரும் போற்றிப் பணிந்திடும்


Saturday, 27 September 2014

ஸ்ரீ நரசிம்மன்


       ஸ்ரீ நரசிம்மன் 

              பல்லவி

        கருணைக்கடலே  ஸ்ரீ நரசிம்மனே

         திருவடி பணிந்தேன் தயை புரிந்திடுவாய்

                அனுப்பல்லவி

         திருமகள் மார்பனே புருடோத்தமனே

          அருமறைகள் போற்றும் ஆதி கேசவா

                   சரணம்

            இரணியனை வதைத்த நாராயணனே

             வருந்துயர் களைந்திடும் வாசுதேவனே

            பெரும்பிணி பவக்கடல் கடந்திட எனக்குன்

             திருவருள் தந்தருள் தீனசரண்யனே











Sri Lakshmi Nrusimhar.

Shri Nrisimhashöakam

This prayer was written by a Shri Vaishnava acarya by the name Shrimad Paramahamsat Yati Jiyar.

TEXT 1

Shrimad akalanka paripurna shashikoöi

Shridhara manohara saöapaöakanta /

palaya kupalaya bhavambudhi nimagnam

daityavarakala narasimha narasimha //

Oh Lord Nrisimha, Oh Lord Nrisimha, You are the husband of Shri, the goddess of fortune.

You are the death of the greatest demon, Hiranyakashipu.

I am sinking in to the ocean of birth and death, Oh Kripalaya, the Treasure House of Mercy, please protect me...!!!

திருமலை வாசன்


                           திருமலை வாசன் 


                                    பல்லவி


                      உனதடிக்கே என்றும் தொண்டு செய்திடவே

                       உனையே வேண்டினேன்  அரிகோவிந்தா

                                     அனுபல்லவி

                       தினமுனைத்துதித்துன் நாமமே உரைத்து

                        மனத்தினுள் நினைத்து திருவடி பணிந்து


                                        சரணம்

                           அனல் புனல் காற்று நிலம் நீள் விசும்பு

                           அனைத்தும் நீயே ஆதி கேசவா
                 
                            சனகாதி முனிவரும் தேவரும் பிரமனும்

                             அனுதினம் வணங்கிடும் திருமலை வாசா
     
                            

மயூரவல்லி




             மயூரவல்லி 


                  பல்லவி

        மயூரவல்லியை மனமாரத் துதித்தேன்

        பேயாழ்வாருதித்த திருமயிலைப் பதிதன்னில்

                   அனுபல்லவி

        தையலாளைத் திருமகளை கேசவன் மார்பிலுரை

        ஓய்யாரவல்லியை ஓங்கு புகழ் உத்தமியை

                       சரணம்

          வையம் போற்றும் யோகமாயையை

          பையத்துயிலும் பரந்தாமன் நாயகியை

          மெய்யடியார் துதிக்கும் மகலக்ஷ்மியை

          ஐயையை ஆதியை அந்தமை மெய்ப்பொருளை











Sri Mayuravalli Thayar, Mylapore, Chennai.

Sri Mahalakshmi Asktakam - Verse 5

आद्यन्तरहिते देवि आद्यशक्तिमहेश्वरि ।
योगजे योगसम्भूते महालक्ष्मि नमोऽस्तुते ॥५॥

Aady-Anta-Rahite Devi Aadya-Shakti-Maheshvari |
Yogaje Yoga-Sambhuute Mahaalakssmi Namostute ||5||

Meaning:
5.1: (Salutations to Devi Mahalakshmi) The Devi who is Without Beginning and End, Who is the Primal Energy, and the Great Goddess,
5.2: Who is Born of Yoga, Who is United with Yoga; Salutations to that Mahalakshmi.

கண்ணன்

       கண்ணன் 


          பல்லவி

    பெரியவனும் நீயே சிறியவனும் நீயே

     அரியே கேசவா உனையே  சரணடைந்தேன்

            அனுபல்லவி

     திரி விக்கிரமனாய் அன்று நீ உலகளந்தாய்

   சிறிய வடிவெடுத்து வாமனனாய்க் காட்சி தந்தாய்    

                   சரணம்
   
       கருடன் மீதேறி உலகை வலம் வந்தாய்

       சிறுவன் கண்ணனாய் மத்தாலடி கொண்டாய்

       உரலில் கட்டுண்டு லீலைகள் பல செய்தாய்
   
        திருமாலே என்றுமுன் திருவடியே காப்பு




part 33. 26/9/2014. Mudal thiruvanthathy-22
அறியும் உலகெல்லாம் யானேயுமல்லேன்-
பொறிகொள் சிறை உவணம்ஊர்ந்தாய்! வெறிகமழும்
காம்பேய் மெந்தோளிகடை வெண்ணை உண்டாயைத்
தாம்பே கொண்டார்த்த தழும்பு.
Not only me the whole world knows your simplicity associated with your Greatness.
You have Garuthman(Suparnan) AS YOUR VEHICLE .It shows your superiority over others.At the same time your simplicity(Sowlabyam) AS A KUTTY KRISHNA is exhibited when you remained helpless in front of Yasodha, allowing her to beat you and tie you . The mark still can be seen in the hip.
He could have escaped with the help of Garuda, but he remained as helpless and allowed Yasodha to punish as she liked.
Suparnan in Sanskrit is UVANAM in Tamil.
Ordinary person can exhibit his simplicity and it is natural. But GOD like Krishna IGNORING his Superior NATURE and exhibiting simplicity is HIS TRUE NATURE.



பெரிய பிராட்டி





  பெரிய பிராட்டி 



 பல்லவி

மண்மகளே தாயே அரங்கனாயகியே

கண்பார்த்தெனையே  காத்தருள்வாயே 

 அனுபல்லவி

 விண்ணாளும் இந்திரரும் தேவரும் முனிவரும்

 அண்ணாந்து பார்த்து கரம் கூப்பி வணங்கிடும்

  சரணம்

  திண் தோளன் திருவரங்கன் மணிமார்பில் வீற்றிருக்கும்

  தண்மதியே தாரகையே கேசவன் நாயகியே

  கண்கவர் பேரழகே பெரிய பிராட்டியே

  எண்ணித் துதித்தேன் திருவடி பணிந்தேன்



ஆதிவினாயகன்





   

                 ஆதிவினாயகன்   

                    பல்லவி

            மலர்மாலைகளணிந்த  மகாகணபதியை

            ஆனை முகத்தோனை மனமாரத் துதித்தேன்

                     அனுபல்லவி

            திலதர்ப்பணபுரி ஆதிவினாயகனை

            உலகெலாம் படைத்தவனை உமையவள் மைந்தனை

                     சரணம்

            நலம் தரும் கரிமுகனைக் கேசவன் மருகனை

            நிலவின் பிறையணிந்த வேழ முகத்தோனை

             புலன் வழி செல்லும் மனம் தனையடக்கிடும்

             பலம் தர வேண்டுமெனத் திருவடி பணிந்து
                 

           

ஸ்ரீ பார்த்தசாரதி


                            ஸ்ரீ பார்த்தசாரதி 

               
                            பல்லவி
                                 
                          பார்த்தசாரதியை மனமாரத் துதித்தேன்

                          பார்த்தவர்கள் பரவசிக்கும் மேனி எழிலுடைய

                               அனுபல்லவி

                          பார்த்தனுக்கு சாரதியாய் துணை நின்ற கேசவனை

                          ஆர்த்தெழுந்த கௌரவரின்  கர்வம் தீர்த்தவனை

                                  சரணம்

                          மார்பினில் திருமகளை வைத்திருக்கும் மாதவனை

                          கார்வண்ணக் கண்ணனை கமலநாபனை

                          தீர்த்தம் தலம் மூர்த்தி அனைத்திலும் சிறந்த

                          பார்புகழும் திருவல்லிக் கேணியில் நின்றருளும் 

Friday, 26 September 2014

பாலசந்திரன்



                      பாலசந்திரன் 


                           பல்லவி

             கண்கவரழகனை  பாலசந்திரனை

             பண்ணிசைத்துப் பாடி மனமாரத் துதித்தேன்

                          அனுபல்லவி

             வெண் பட்டுடுத்தி  வேழமுகத்துடன்

             தண்மதி பிறையணிந்த கேசவன் மருகனை

                            சரணம்

             விண்ணவரும் மண்ணவரும் நந்தியும்  கணங்களும்

             எண்ணிலா முனிவரும் தேவரும் வணங்கிடும்

             சண்முகன் தமையனை சங்கரி மைந்தனை

              புண்ணியம் செய்தோர்க்கருளும் ஆனைமுகத்தோனை


கஜேந்திர வரதன்







          கஜேந்திர வரதன் 



           பல்லவி

          கஜேந்திர வரதனை திருமாலைக் கேசவனை

          தலங்களுள் சிறந்த கபித்தலத்தில் பணிந்தேன்

           அனுபல்லவி

           அஜனமரேந்திரனும் முனிவரும் வணங்கிடும்

           அரவிந்த பதத்தானை அம்புய நாபனை

              சரணம்

            கஜராஜனுக்கபயமளித்த  கண்ணனை

            புஜங்க சயனனை புருஷோத்தமனை

             விஜயாசனனாய் வரகுணமங்கை வளர் 

            விஜயனின் நேசனை  விஜய ராகவனை

           


Thursday, 25 September 2014

பானைக நரசிம்மன்


               பானைக நரசிம்மன் 

       
                        பல்லவி

          பானைக நரசிம்மநுனை மனமாரத் துதித்தேன்

          வானகமும் வையகமும் பணிந்தேத்தும் மாதவனே

                      அனுபல்லவி

          தேனார் மொழியாள்  திருமகளைத் தன் மார்பில்

          தானாக வைத்திருக்கும்  அழகிய சிங்கனே

                      சரணம்
                               
           மீனாயாமையாய் அவதரித்த  ஸ்ரீ தரனே

           தீனசரண்யனே  திருமாலே கேசவா

           நானுனக்கு  குற்றேவல்  செய்திடும் பாக்கியம்

           நீயெனக்கருள வேண்டுமெனப்  பணிந்து 

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி



                       ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி 


                             பல்லவி

                  ஸ்ரீ  தேவியுந்தன்  பாதம் பணிந்தேன்

                   ஆதவன் ஒளியையும் மிஞ்சுமொளியுடைய

                               அனுபல்லவி

                   வேத சாத்திர புராணங்கள் போற்றும்

                    மாதே மரகதமே கேசவன் சோதரி

                                   சரணம்

                    கனக மலைதனில் வீற்றிருப் பவளே

                    ஜனன மரண பயம் களைபவளே

                    அனைவரும் வணங்கிடுமம்பிகையே - ஸ்ரீ

                     லலிதா திரிபுர சுந்தரியே 

துதிக்கையன்




         துதிக்கையன் 

        பல்லவி

        அதிசயமாக அரவணையிலமர்ந்து

        பவனி வரும் துதிக் கையனைப் பணிந்தேன்

           அனுபல்லவி

        மதியாத யானைமுக அரக்கனை வதைத்தவனை

        மதியணிந்த கரிமுகனைக் கேசவன் மருகனை

               சரணம்

        விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவனை

        புதியவை தொடங்கும் முன் அனைவரும் வணங்கிடும்

        மதிசேகரன் மகனை  மத வாரண முகனை

        துதித்திடுமடியார்க்கு நலமளிக்கும் கணபதியை





Ganesha in sesha (snake) vahanam !

         

ஒளிதரும் கணபதி






                     ஒளிதரும் கணபதி 


                        பல்லவி

               ஒளிதரும்  ஞான கணபதியைக் கரிமுகனை

               களிப்புடன் கண்டு மனமாரத் துதித்தேன்

                         அனுபல்லவி

                உளி கொண்டு செதுக்கிய சிலை வடிவானவனை

                பளிச்சென்று  அழகுடன்  வீற்றிருப்பவனை


                           சரணம்              

                 தெளிந்த ஞானமும் கல்வியுமளித்திடும்

                  எளிய கடவுளை ஏழைப் பங்காளனை

                 வெளி வளி நீராகி நிலனாகி நெருப்பாகி 

                 களிக்கின்ற குஞ்சரனைக்  கேசவன் மருகனை 



                 
                    

தாசன் கேசவன்





                  தாசன் கேசவன் 

                     பல்லவி  

                உனக்கே அடிமையாய் தொண்டு செய்திருக்கும்
                பாக்கியம்   எனக்கருள்வாய்  கோவிந்தா

                         அனுபல்லவி

                 தனக்குவமை இல்லாத  தனிப்பெருங்கடவுளே
                  வனமாலை துளபமணிந்திடும்  கேசவா

                             சரணம்

                  தினகர குலத்துதித்த ஸ்ரீ ரகு ராமனே
                  தனம் புகழ் பதவி எதுவும் வேண்டேன்            
                  வனங்கள் சோலைகள் நிறைந்த திருமலையில்
                   தினமுந்தன் திருநாமம் வாயாரப் பாடி







Wednesday, 24 September 2014

வைணவன் கேசவன் 2

                வைணவன்  கேசவன்

                           பல்லவி

           திருநாமமுரைப்பதன்றி வேறொன்றுமறியேன்

            திருவடி  நிழலோன்றே அறிந்தேன் கேசவா
           

                          அனுபல்லவி

           ஒருநாளுமுன் நாமமுரைக்காமல் இருந்திலேன்

           திருவடி துதிக்காத நேரமுமிருந்த தில்லை

                              சரணம்

                 சாத்திர புராணங்கள் வேதங்கள் கற்ற தில்லை

           தோத்திரங்களேதும்  உனைப் புகழ்ந்து சொன்னதில்லை

                கோத்திரம் குலமெதுவும் பெரிதாக எனக்கில்லை

               நேத்திரம் வைத்தென்னைக் காத்தருள்வாயே







மங்கள மூர்த்தி



                     மங்கள மூர்த்தி 


                          பல்லவி

             சங்கடமிடர் களையும்  சங்கரன் மகனை

             மங்கள மூர்த்தியை மனமாரத் துதித்தேன்

                        துரிதம்

              நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்

               பிரமனுமிந்திரனும் கரம் பணிந்தேத்தும்

                             அனுபல்லவி

             எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப் பங்காளனை 

             வெங்கதிரோன் சுடரைப் பழிக்குமொளி உடையானை 

                               சரணம் (1)

             பொங்கரவணை துயிலும் கேசவன் மருகனை 

             அங்கமில்  மதனழகை மிஞ்சுமழகுடையவனை 

             துங்கக்கரிமுகனை தும்பிமுகப் பெருமானை 

             திங்கள் பிறையணிந்த ஆனை முகத்தோனை 

                               சரணம் (2)

              அங்குசம் பாசம் தந்தம் மோதகம் 

              தன்கையிலேந்தும்  தந்தி முகத்தோனை 

              காங்கேயன் சோதரனை காரமர் மேனியனை 

              சங்கீத நாட்டியக்  கலைகளின் ரசிகனை 
             

             

ஸ்ரீ மஹாதிரிபுரசுந்தரி


                 ஸ்ரீ  மஹாதிரிபுரசுந்தரி 

                       பல்லவி

                 முப்பெருந் தேவியராய்  எழுந்தருளிக் காட்சி தரும்

                  திரிபுரசுந்தரியை  மனமாரப்பணிந்தேன்

                            அனுபல்லவி

                   இப்புவி நலம் பெற நவராத்திரி நன்னாளில்

                     துர்கா லக்ஷ்மி சரஸ்வதியென்று

                                     சரணம்

                    ஒப்புயர்வில்லாத  ஸ்ரீ லலிதாம்பிகையை

                    துப்புரவுடனே அகம் புறம் துலக்கி

                    இப்பிரபஞ்சமே  நலமுடன் விளங்கிட

                    முப்பொழுதுமடியேன் கேசவன் துதித்து
                     

அரங்கன்



          அரங்கன் 


            பல்லவி

         அரங்கனைப் பணி மனமே - தினமே

          அரங்கனைப் பணி  மனமே

                அனுபல்லவி

          கரங்களை நீட்டி  அபயமளித்திடும்

          வரங்களை தந்திடும் மாதவனைக் கேசவனை

                    சரணம்

           நிரந்தரமில்லா உலகிநிலென்றும்

           நிரந்தரமானவனை நிலைத்திருப்பவனை

           பரகதி யளித்திடும்  பரந்தாமனை

           பரம தயாளனை பாற்கடல் வாசனை

         

           

நீர்வண்ணன்


                        நீர்வண்ணன் 

                           பல்லவி

            நீர்மலை மேல் நின்றருளும் நீலமுகில் வண்ணனை

            பார் போற்றும் கேசவனை மனமாரத் துதித்தேன்

                     அனுபல்லவி

             கார்குழல் மங்கை அணிமா மலராள்

             சேர்ந்துடனிருக்கும் அழகனை மாலனை

                        சரணம்

            மார்பணியாய்த் திருமகளை  வைத்திருப்பவனை

            கார்வண்ண மேனியனைக் கண்ணனை மாதவனை

             நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்

             இன்றும் காட்சிதரும்  ஸ்ரீ ரங்கநாதனை


ஸ்ரீ மகா கணபதி


 


                      ஸ்ரீ   மஹா கணபதி 

                           பல்லவி

               காத்தருள்வாய் ஸ்ரீ மகாகணபதி

               பிரார்த்தனை செய்துனை மனமாரத் துதித்தேன்

                            அனுபல்லவி

               மூத்தவனே சிவ பார்வதி மைந்தனே

              தோத்திரம் செய்திடுமடியார்க்கருள்பவனே

                             சரணம் (1)

              நாற்றிசையும் போற்றும் கேசவன் மருகனே

              மாற்றுரைத்தவனே கந்த சோதரனே

              ஊற்றாய்ப் பெருகும் கருணைக் கடலே
                 
              ஏற்றமிகு ஆரூரில்  வீற்றிருப்பவனே

                           சரணம்(2)

               திங்கள் பிறையணிந்த பங்கய பதத்தானே

                மங்கல  வெண்பட்டாடை அணிந்தவனே

                அங்குச பாசம் மோதகம் தந்தம்

                கரங்களிலேந்தும்  பெருவயிற்றோனே

                             சரணம் (3)

                முங்கிடச்செய்யும் பொங்கும் பவக்கடல் தனையே

                 கடந்திட உதவிடும் துங்கக் கரிமுகனே

                 இயலிசை நாட்டிய நாடக ரசிகனே        

                 முழுமுதற் கடவுளே  ஆனை முகத்தோனே

                               சரணம் (4)        
         

                 காவியத் தலைவனே  எலி வாகனனே 

                 கோடிக் கதிரவனை மிஞ்சும் தேசுடையவனே

                 தேவரும் முனிவரும்  நந்தியும் கணங்களும்

                  மூவரும் யாவரும் துதித்திடும்  மெய்ப்பொருளே      





               ************             ******       **************

    ஸ்ரீ   முத்துசாமி   தீட்சிதரின்  கௌள  ராக  கீர்த்தனையின் சாராம்சம்
   ( Thanks to Smt.Kalamalini Sundararajan)
ஸ்ரீ மஹாகணபதி என்னை என்னை ரக்ஷிக்கட்டும். சகல சித்திகளையும் அருளச்செய்யும் ஆனைமுகத்தைஉடையவர். மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரும்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர். திருவாரூரில் இருக்கும் கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர். அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர். குருகுஹனான அழகு முருகனின் சகோதரன் சிவகுமாரன்.
தங்கத்துக்கு மாற்றுரைத்த உரைக்கல்லாக வடிவெடுத்த கணேசர், தாமரைபூக்களின் மீது நடனமாடுபவர், வெண்பட்டாடை அணிந்தவர், தன்நெற்றியில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர்பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப் படுபவர், தன் வயிற்றினில் உலகனைத்தும் அடக்கிஅ தனால் பெருவயிறு படைத்தவர், கைகளில் கருநெய்தல் மலர், தந்தம், பாசக்கயிறு, அங்குசாயுதம், மோதகம் ஆகியவற்றை வைத்திருப்பவர், எப்பொழுதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர், பிறவிப் பெரும்கடலை கடக்க மனிதர்களுக்கு ஓடமாகி கரைசேர்ப்பவர், எல்லாவற்றிர்க்கும் முழு முதற்கடவுளாக இருப்பவர், வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர், கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர், கவிகளால் புகழப்படும் மூஞ்சூற்றினை தன் வாகனமாகக் கொண்டவர், தேவர்களால் சூழப்பட்டு பணிந்து வணங்கப்படுபவர், ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை
அருள்பவர், இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டும்

Tuesday, 23 September 2014

மீனாக்ஷி



                          மீனாக்ஷி 


                              பல்லவி

                 உலகேழும் படைத்தவளை உமாமகேஸ்வரியை 

                 தலை தாழ்த்திப் பணிந்து மனமாரத் துதித்தேன்

                             அனுபல்லவி

                 அலகிலா விளையாடல் பல புரிந்தவளை

                  ஆலவாயழகனின் மனம் கவர்ந்தவளை

                                சரணம்                  

                    நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளை

                    அலைமகள் கலைமகள் நேசிக்கும் மலைமகளை

                    குலம்  கல்வி செல்வமனைத்தும் அளிப்பவளை

                    அங்கையர்கண்ணியை  மதுரவாணியை




     

பள்ளிகொண்ட பெருமாள்

         பள்ளிகொண்ட பெருமாள் 



          பல்லவி

        பள்ளிகொண்ட பெருமாளை  ஸ்ரீ லக்ஷ்மி ரங்கனை

        திருத் தெற்றியம்பலத்தில் மனமாரத்துதித்தேன்

           அனுபல்லவி

         வெள்ளக்குளம் தன்னில் அண்ணன் பெருமாளாய்

          நின்று காட்சிதரும்  கண்ணனைக்  கேசவனை

                சரணம்

          அள்ளக் குறையாத அருள் மழை பொழிந்திடும்

          கள்வனைக் கார்மேக வண்ணனைத் திருமாலை

          புள்ளூர்தியில் திரியும்  புருடோத்தமனை

           முள்ளாயுறுத்துமென் பவப்பிணி நீங்கிட


சித்தி விநாயகன்

    
               சித்தி விநாயகன் 


                       பல்லவி

               சித்தி விநாயகனை  மனமாரத் துதித்தேன்

                சித்தியும் புத்தியுமுடனிருந்து  போற்றும்

                       அனுபல்லவி

                 அத்தி முகத்தோனை கேசவன் மருகனை

                 வித்தகர் பணிந்தேத்தும்  வேதமுதல்வனை

                          சரணம்

                 முத்தியும் ஞானமும் பணிவோர்க்களித்திடும்

                  உத்தமத்  தலைவனை  முழுமுதற் கடவுளை

                  புத்திக்கும் மனதிற்கும் எட்டாத தேவனை

                  எத்திசையும் புகழ் விளங்கும் சத்தியப் பொருளை




          ******.         *******.       ********.  *********

         கணபதி எனும் சொல்லில் "க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. "ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. "பதி " என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.

மதுசூதனன்


                                      மதுசூதனன் 


                                               பல்லவி

                                மதுசூதனநுனை மனமாரத் துதித்தேன்

                                கதியுன்  பதமென துதிபல செய்து

                                              அனுபல்லவி
           
                                  புதுப்புது அவதாரம் எடுத்த கேசவனே

                                   மதுராதிபதே மாயக் கண்ணனே
                                   
                                               சரணம்

                                   பதும நிதியும் சங்க நிதியும்

                                   எதுவும் வேண்டேன் இனி வரும் பிறப்பிலும்

                                   ஏழையேன் உனது பதம் தனை மறவாத

                                    மனமொன்றே போதுமென உனையே வேண்டி

   

ஸ்ரீ காமாக்ஷி


                     ஸ்ரீ காமாக்ஷி 


                             பல்லவி

                  உன்னையும் என்னையும் ஆட்டிப் படைக்கும்

                   அன்னை காமாக்ஷியை மனமாரத் துதித்தேன்

                           அனுபல்லவி

                    பன்னகாபரணன்  ஏகாம்ரேச்வரனின்

                    உன்னத மனங்கவர்  கேசவன் சோதரியை

                               சரணம்

                    நன்னெறி காட்டிடும் குருமணி சங்கரரும்
 
                    அன்புடன் குமரனும் ஆனை முகத்தோனும்

                    இன்னும் முனிவரும் வானுறை தேவரும்

                     என்றும் பணிந்தேத்தும் ஏகாம்ரேச்வரியை
         
                   
     




                       

Monday, 22 September 2014

திருவேங்கடமுடையான்

     

                        திருவேங்கடமுடையான் (இன்று )


                                             பல்லவி

                        பார் போற்றும் கேசவனைத் தீருவேங்கடமுடையானை
                       
                        நேர் நின்று துதித்திடும்  பாக்கியம் பெற்றேன்

                                              அனுபல்லவி

                         தேர் நடத்திப் பார்த்தனுக்கு சாரதியாய் நின்றவனை
                         
                         மார்பினில் திருமகளை வைத்திருக்கும் திருமாலை
                       
                                    சரணம்

                         நீரும் நிலமும் அரிதாகிப் போன

                         சீருந்தும் பேருந்தும் சீறிப்பாய்ந்து  செல்லும்

                         தார் சாலைகள்  நிறைந்த ஊரென்னும் பேருடைய

                         சீர்மல்கும் வேங்கடத்தில்  கோயில் கொண்டவனை

                       


         திருவேங்கடமுடையன் (அன்று )
           

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,

பேர எறிந்த பெருமணியை, - காருடைய

மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்

என்னென்ற மால திடம்.

(Poigai Azhwar)

Worshipful Celestial descend saying, "Our Lord's abode", where gypsies hurl brilliant gemstones to drive away wild elephants, that striped serpents mistake for lightning clouds and creep into hiding in venkatam.

வாமனன்

                             

                                         வாமனன் 


                                                  பல்லவி

                                   பற்றறுத்திடவே  பற்றினேன்  மலர்ப் பதம்

                                    உற்ற துணை நீயே பரிந்தருள் புரிவாய்

                                            அனுபல்லவி
                       
                                    கற்றவர் கல்லாதவர் அனைவரும் பணிந்திடும்
                                     
                                    கொற்றவனே செற்றார் படிகடந்த திருமாலே

                                              சரணம்

                                     நற்றவ முனிவரும் வானவரும் தானவரும் 

                                     நற்றாமரை மலர் தூவி ப்பணிந்தேத்தும் 

                                     பெற்றவர் தளைகளைக் களைந்தவனே கேசவனே

                                     உற்றவர் நலம் காக்ககும் வாமனனே மாதவனே

                                 

                     




 Mudal thiruvanthathy-20

பெற்றோர் தளைகழலப் பேர்ந்து, ஓர் குறள் உருவாய்,

செற்றார் படிகடந்த செங்கண்மால் நல்தா

மரை மலர்ச்சேவடியை வானவர் கைகூப்பி,

நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று
,
Is this pasuram on Krishna or Vamanan. It is on both.When born as Vaman he removed the 
bondage of all. ஆஸ்ரயீக்க பெற்றோர் .. Those who had come under his feet, He did it for all.

As Krishna when born he removed the chains of his parents Devaki & Vasudevar who 


were tied up in the jail due to Kamsa's order.

Vanavar i.e Devas worship HIM whether HE takes Vamana/ Thrivikrama Avthar or appear 
as Krishna. Brahma & Siva left their lokas to reach Gokulam to have the darshan of 

Little Krishna.
Krishna appeared to Devaki & Vasudeva with HIS original four hands and the Divya 

ayuthas ( weapons) HIS parents Devaki & Vasudeva requested him to be like any other


child to escape from being identified by His Uncle Kamsa who was waiting to kill him.
Krishna obeyed immediately by making his foru hands to disappear. HE did PITRUVAKYA
 PARIPALAN on birth.

He instructed Vasudevar to carry him to Gokulam and leave him 


inNandagopar&Yasoda's
 home. To lift their child born at the same time when he was born here, and bring it back 
and handover to Kamsa.That is how he moved from Mathura to Gokulam.
When HE was born as Vaman he covered the mind of Mahabali with his beautiful look and 
sweet words and did all this to do a favor Devanthran. On both the occasions the Devathahs
 worshiped HIM.

நின்று.Permanently as they can not stop worshiping HIM.நின்று நிலைநின்று

சேவற்கொடியோன்





                      சேவற்கொடியோன் 



                         பல்லவி

                சேவற்கொடியோனை  கேசவன் மருகனை

                 ஆவலுடன் கண்டு மனமாரத் துதித்தேன்

                               அனுபல்லவி

                  தேவியரிருவரும் அருகிருந்து போற்றும்

                  தேவசேனாபதியை  வேலாயுதனை

                                 சரணம் (1)

                   கூவியழைத்தால் ஓடோடி வருபனை

                   மாவிடை வாகனன்  பரமசிவன் மகனை

                   மூவாசைப் பிணி போக்கும் முன்வினைப் பயன் நீக்கும்

                    தேவாதி தேவனை கரிமுகன் சோதரனை 

                                    சரணம்(2)

                     தேவரும் முனிவரும் பிரமனும் நாரதரும்

                     தேவேந்திரனும்  யாவரும் வணங்கிடும்

                      தேவிபார்வதியின் அன்புத் திருமகனை

                       மூவுலகும் பணிந்தேத்தும் கார்த்திகேயனை


                   

                 

பவனி வரும் விநாயகன்



   

                      பவனி வரும் விநாயகன் 


                       பல்லவி

                  தேரேறி பவனி வரும்  விக்ன விநாயகனை

                  காரமர் மேனியனை மனமாரத் துதித்தேன்

                        அனுபல்லவி

                  ஈரேழு பதினான்கு உலகையுமாண்டிடும்

                  வாரண முகனைக் கேசவன் மருகனை

                            சரணம்

                  தாரமர் கொன்றை  சண்பக மாலையணி

                  ஊரர்தம் பாகத்து உமையவள் மைந்தனை

                  பாரோர் பணிந்தேத்தும் பங்கய பாதனை

                   சீர்மல்கும் திருவாரூர் வாதாபி கணபதியை 

ராஜகணபதி


                  ராஜகணபதி 



                 பல்லவி

            தர்பாரில் வீற்றிருக்கும் ராஜ கணபதியை

            சர்வமும் நீயென மனமாரத் துதித்தேன்

                 அனுபல்லவி

           அர்ச்சையாய் கோயிலில் நிற்குமய்ங்கரனை

           கற்றோர் மனத்தினில் இருக்கும் கரிமுகனை

                       சரணம்  

              சர்ப்பம் தனை இடுப்பிலணிந்திருப்பவனை

              சிற்பரன் மகனைக் கேசவன் மருகனை

               கர்மவினைப் பயனால் கட்டுண்ட என்னை

                வர்மம் வைத்திடாமல் காத்தருள வேன்ன்டுமென 

மன்னார்குடி ராஜகோபாலன்


                 மன்னார்குடி ராஜகோபாலன் 



                             பல்லவி

              கண்ணுக்கினியானை மன்னார்குடி அழகனை

              கண்ணனைக் கேசவனை மனமாரத் துதித்தேன்

                            அனுபல்லவி

               தண்மதி முகத்தானைத் தாமரை பதத்தானை

               விண்ணவர் பணிந்தேத்தும்  தேவாதி தேவனை

                               சரணம்

               புண்ணியம் செய்தோருக்கு கண்ணெதிரில் காட்சி தரும்

               வெண்ணையுண்ட வாயனை நீலவண்ணனை

               மண்ணளந்து விண்ணளந்து மூவடியலுலகளந்த

               வண்ணமிகு  வாமனனை மதுசூதனனை 

Sunday, 21 September 2014

ஆராவமுதன் கோவிந்தன்

                       

                      ஆராவமுதன்  கோவிந்தன் 


                             பல்லவி

                 ஆராவமுதனை   நாராயணனை

                 திருவேங்கடமுடையானை மனமாரத் துதித்தேன்

                             அனுபல்லவி

                 தீராவினை தீர்க்கும் மாதவனைக் கேசவனை

                 பேராயிரமுடைய  பேரருளாளனை 

                               சரணம்
                 
                 பனி விழுந்து வணங்கி பகலிலெழும் மூங்கில்கள்
               
                 நிறைந்திருக்கும் வேங்கடத்தில் நிமிர்ந்து நின்றானை

                 இனிய தேனுண்டு தேனீக்கள் மொய்க்கும்

                 மலர் வனம் சூழ் குடந்தையில் கிடந்த திருமாலை


               
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய்

விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று

எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்

செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

(Thirumazhisai Azhwar)

You stand in Venkatam the hill where bamboo shoots know how to pray;
They drop to ground by dew of night and rise again by heat of Sun.
You lie in cool Kudanthai plains where bees in blossoms fill the bower;
they fly so high and drop again to drink the nectar of the Lord.

ஸ்ரீ சரஸ்வதி



                   ஸ்ரீ சரஸ்வதி                      

                     பல்லவி            

              கண்கவரழகுடன் காட்சி தரும் கலைமகளை

               கண்ணாரக் கண்டு மனமாரத் துதித்தேன்

                         அனுபல்லவி

              வெண் கலையுடுத்தி  வீணை தனையேந்திடும்

              தண்மதி முகத்தினளை  புண்ணிய பதத்தினளை

                           சரணம்
             
             விண்ணோரும் மண்ணோரும் துதித்திடும் பாரதியை 

              மண் மகள் மலைமகள் நேசிக்கும் சரஸ்வதியை

              இன்னிசை ஞானமும் கல்வியும் கலைகளும்

              கேசவன் யான் பெறவே கமல பதம் பணிந்து

             
             
   


விக்ன விநாயகன்





                     விக்ன விநாயகன் 



                      பல்லவி

             ஈசன் மகனை மகாகணபதியை

            நேசமுடன் வணங்கி மனமாரத் துதித்தேன்

                    அனுபல்லவி

             பேசும் தெய்வமாய்க் கலியுகக் கடவுளாய்

             காசினி போற்றும்  கேசவன் மருகனை

                         சரணம்

             நீசன் யானைமுக அரக்கனை  அழித்தவனை

              ஆசாபாசத் தளைகளைக் களைந்திடும்

              மாசறு பொன்னை மாசிலாமணியை

              தேசுடையானை விக்ன விநாயகனை

             


             
             
              

வல்வில் ராமன்



                  வல்வில் ராமன் 


                        பல்லவி

              அனந்தசயன ராமனை கேசவனை

              புள்ளம் பூதங்குடியில் மனமாரத் துதித்தேன்

                          அனுபல்லவி

              வனங்களில் திரிந்து களைத்த ராகவனை

              பறவையரசனுக்கு மோட்சமளித் தவனை

                               சரணம்

               தனிக்கோயில் கொண்ட தாமரையாள் போற்றும்

               தினகர குலத்துதித்த கோதண்ட ராமனை 

               வனமாலை துளபம் கௌத்துபமணிந்தவனை 

               அனைவரும் பணிந்தேத்தும் வல்வில் ராமனை 

               
               

            
***************************
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றாதிருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்
மின்னு சோதி நவ மணியும்
வேயின் முத்தும் சாமரமும்
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும
புள்ளம்பூதங்குடிதானே,

புள்ளம்பூதங்குடி பெருமான் மீது கலியன் பொழிந்த அமுதம்,

ஆழ்வார் திருவடிகளே சரணம்
*******************************

ஸ்ரீ



     
             ஸ்ரீ 


பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.
இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?
அதற்கு சிவபெருமான் சொன்னது:
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே
’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.

குறையில்லாத கோவிந்தன்







         குறையில்லாத  கோவிந்தன் 


                பல்லவி  

      எனக்கொரு குறையில்லை கோவிந்தா

      உனது திருவடி சரணடைந்த பின்னே

               அனுபல்லவி

      மனம் முழுதும் நீயே நிறைந்திருக்கின்றாய்

      தினமுமுன்  நாமமே தொழுதேன் கேசவா

                     சரணம்

      வினதையின் மகனை வாகனமாய்க்கொண்டவனே

      அனந்தனின் மீதுறங்கும் பதுமனாபனே

       வனங்கள் நிறைந்த திருவேங்கடம் தன்னில்

       மனம் குளிரக் காட்சி தரும் ஏழுமலையானே




 



Saturday, 20 September 2014

தாயும் சேயும் கோவிந்தனே





         தாயும் சேயும் கோவிந்தனே 



    பல்லவி

    நீயின்றி நானில்லையே  கோவிந்தா

     நானின்றி  நீயில்லையே  என்றும்

       அனுபல்லவி

      தாயின்றி சேயுண்டோ  சொல்வாய்

      மாயனே கேசவா மதுசூதனனே

              சரணம்

      நீயாகவே வந்தெனுள்ளம் புகுந்தாய்

      தாயாகித் தந்தையுமாய் நீயாண்டுகொண்டாய்

      சேயென்னைக் கனிவோடுன் மடிமீது தாங்கி

      கோயில் கொண்டுள்ளத்தில் நீயே யமர்ந்தாய்


**********************************
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.
(Thirumazhisai Azhwar)
O Lord Narayana! You may grace me today, or tomorrow, or some time later, but your grace is definitely coming.
I cannot be without you, Nor can you be without me.

பாலவிநாயகன்



     பாலவிநாயகன் 


           பல்லவி

பட்டாடையுடுத்திய பாலவிநாயகனை

மட்டவிழ்  மலர் தூவி மனமாரத் துதித்தேன்

            அனுபல்லவி

  எட்டெழுத்து நாயகன்  கேசவன் மருகனை

  வட்ட நிலவின் பிறையை சூடிய கரிமுகனை

              சரணம்

     சிட்டரைக் காக்கவும் துட்டரை மாய்க்கவும்  

     திட்டமிடும் ஐங்கரனை ஆனை முகத்தோனை

     இட்டசித்தி கணபதியை இடர்நீக்கும் தேவனை

     கெட்டலையும் மனக்குரங்கை அடக்கிட வேண்டுமென
      

தத்துவ கணபதி



         தத்துவ கணபதி 


               பல்லவி

       வித்தகர் போற்றும் தத்துவப் பொருளை

      விக்னவினாயகனை மனமாரத் துதித்தேன்

                அனுபல்லவி

        மத்தள வயிற்றானை கேசவன் மருகனை

        அமுத குடமுடைய  ஐந்து கரத்தானை

                    சரணம்
        மன யானை தனையடக்க அங்குசமும் பக்தர்களின்

        எதிரிகளை கட்டப் பாசக்கயிறுமேந்தும்

        ஒற்றைக்கொம்பனை  பாரதமெழுதிய

        கரிமுகனை மோதகக் கையனை கணபதியை






விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.