ஸ்ரீ கோதா ஸ்துதி !
16. த்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |
மஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் ||
கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான். தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி, அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன. அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம்வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது. நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா —-
கோதை நீ……
பல்லவி
கோதை நீ சூடிக் கொடுத்த மாலையை
மாதவன் கேசவன் மனம் மகிழ ஏற்றான்
அனுபல்லவி
போதை தரும் தேனையதிலுண்ட வண்டுகள்
கீதமென ரீங்காரம் செய்து பாடின
சரணம்
நாதமென ரீங்கார ஓசையே யுந்தன்
சுயம்வர வாத்திய இசையென ஆனது
ராதையே அந்த கீதமே உனது
மாலை மாற்றும் மணப் பாடலாய் ஒலித்தது
No comments:
Post a Comment