தகப்பன்
அகக்கண் வளர்க்கும் அழகிய மேய்ப்பன்
சுகம் நமக்களித்து சுமைகளை ஏற்பவன்
புகலிடம் உடை உணவு தந்து காப்பவன்
முகம் வாடக் கண்டால் களிப்புறச் செய்பவன்
இகபர சுகங்களின் வழி காண்பிப்பவன்
சகாக்களில் நல்லவர் தீயவர் இனம் சுட்டும் தோழன்
அகம் புறமிரண்டுக்கும் நல்வழியுரைப்பவன்
புகழிகழிரண்டையும் சமமெனக் கொள்ளும்
அகம் நாம் பெறவே வழிதனையுரைப்பவன்
மிக நல்ல தோழன் ஆசான் தேவன்
உகந்தவன் தாள் பணிந்து என்றும் வணங்குவோம்
No comments:
Post a Comment