தயங்குவதேனோ…….
பல்லவி
தயங்குவதேனோ ஶ்ரீ ரகு ராமா
உனைத் துதிக்குமென்னை ஆண்டருள இன்னும்
அனுபல்லவி
அயனையுமனங்கனையும் படைத்த கேசவனே
துயரிடர் பவபயம் களைந்திடும் ராகவனே
சரணம்
உயர்வுற உயர் நலமுடைய ரகுவரனே
கயல்விழி சீதையின் கரம் பிடித்தவனே
புயலெனப் பாய்ந்து தசமுகனை மாய்த்தவனே
நயமுடன் சபரிக்கு மோட்சமளித்தவனே
No comments:
Post a Comment