அணியுமணிக்கழகே….
பல்லவி
அணியுமணிக்கழகே அரங்கநகர் பெருமாளே
பணியேன் ஒருவரையும் உன் பதம் பணிந்த பின்னே
அனுபல்லவி
பணிந்தேத்தும் அமரருக்கு அமுதளித்த ஆரமுதே
அணியாய்த் திருமார்பில் திருமகளை வைத்திருக்கும்
சரணம்
மணி வைரம் வைடூர்யம் மரகதம் முத்துக்கள்
அணிகலன்களனைத்தும் உந்தன் மேனியிலே
அணிந்த தனாலதன் பெருமை கூடிற்றேயல்லாமல்
அணிமணிகள் உனக்கெதற்கு அழகான கேசவனே
No comments:
Post a Comment