சிவையே ! உனது இருகாதுகளும் உருக்கிய தங்கத்தாலான
பெருங்குண்டலங்களையும் மாணிக்கமும் முத்தும் வைரமும்
பதித்த ஒப்பற்ற இரு சக்கிரங்கள் வடிவான தங்கத்தாடங்கங்களையும் அணிந்துள்ளவை. மூக்கின் நுனி சுக்கிரனின் ஒளியை அவமதிக்கிற ஒளியுள்ள முத்தை அணிந்து அழகுற்றது. இவ்விரண்டையும் வணங்குகிறேன். (38)
சிவசக்தியே…..
பல்லவி
சிவசக்தியே உனது கமல பதம் பணிந்தேன்
தவயோகியர் முனிவர் ஞானியர் வணங்கிடும்
அனுபல்லவி
புவனம் போற்றும் கேசவன் சோதரியே
பவப்பிணி போக்கிடும் புவனேச்வரியே
சரணம்
செவிகளிரண்டிலும் சக்கர வடிவினில்
மாணிக்கம் வைரம் முத்துக்கள் பதித்த
தங்கத் தோடுகளும் மூக்கில் சுக்கிரனின்
ஒளியைப் பழிக்கும் முத்துடன் விளங்கும்
No comments:
Post a Comment