ஸ்ரீ ஸூக்தம்.
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜத ஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ.
ஹே ஸ்ரியபதியே,தங்கநிறமுள்ளவளும்,பாபங்களைப் போக்குபவளும்,பொன்னாலும் வெள்ளியாலும் இயன்ற மாலைகளை அணிந்திருப்பவளும் நிலவைப்போன்ற குளிர்ந்த ஒளியுடயவளும்,பொன்மயமானவளும் ஆகிய ஸ்ரீ லக்ஷ்மி தேவியை எனக்கு ப்ரஸன்னமாகும்படி அருள்புரிய வேண்டும்.
திருவின் நாயகனே…..
பல்லவி
திருவின் நாயகனே திருமாலே கேசவனே
திருத்தங்கும் மணிமார்பா தீனருக்கருள்வோனே
அனுபல்லவி
கருநிறவண்ணனே மோகனக் கண்ணனே
அருள் பெற வேண்டியே கமலபதம் பணிந்தேன்
சரணம்
தங்கமயமானவளை செங்கமலவல்லியை
தங்கம் வெள்ளிமணி மாலைகளணிந்தவளை
திங்கள் திருமுகத்தாளைத் திருவென்னும் பெயராளை
இங்கெழுந்தருளி எமக்கருளச் செய்திடுவாய்
No comments:
Post a Comment