என்னவென்று சொல்லுவேன்…..
பல்லவி
என்னவென்று சொல்லுவேனுன்னழகை ஶ்ரீராமா
மன்னவனே மனங்கவர் பேரழகே கேசவனே
அனுபல்லவி
உன்னழகில் மயங்கியே கன்னி ஜானகியும்
உன் கரம் பிடித்தாளோ இன்னமுதே ராகவனே
சரணம்
புன்னகை முகத்தோனே கமலக்கண்ணனே
அன்னை கோசலையின் அருமை மைந்தனே
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
தன்னிகரில்லாத தனிப் பெருமை கொண்டவனே
முன்னம் யான் செய்த பழவினைப் பயன் களைந்து
என்னை ஆண்டருள உன்னருளை வேண்டினேன்
தென்னிலங்கை சென்று தசமுகனையழித்தவனே
மன்னு புகழ் மாயனே உன் பொன்னடி பணிந்தேன்
No comments:
Post a Comment