தங்கா தெழுந்து தடைமீறி வேட்கை
தனைமாற்ற வல்ல புனலே! இங்கேஎன் நாவில் அமுதாகப் பள்ளி
எழுவாய் உறங்கும் அனலே! தெங்கோடு வாழை கைகோத்த சோலைத்
தென்பாங்கு நாட்டு நிலவே! சிவனார்தம் பாகம் பிரியாது வாழும்
திருவெற்றி யூரில் உமையே!32
அன்னையே….
பல்லவி
அன்னயே சிவனார் பாகம் பிரியாதவளே
என்னைக் காத்தருள்வாய் கேசவன் சோதரி
அனுபல்லவி
அன்னமே அழகே உறங்கும் அனலே
என் நாவில் இனிதாகப் பள்ளி எழுவாயே
சரணம்
தென்னையொடு வாழையும் சேர்ந்த சோலைக்
கன்னலே தேனே அழகிய வான் நிலவே
தன்னை மீறி வரும் வேட்கையை மாற்றிடும்
உன்னையே கை தொழுதேன் வெற்றியூருமையே
No comments:
Post a Comment