நாராயணாவென்றே…..
பல்லவி
நாராயணாவென்றே கூவியழைத்தேனே
பாராமுகம் ஏனோ மாதவா கேசவா
அனுபல்லவி
ஶ்ரீராமனும் நீயே ஶ்ரீகிருஷ்ணனும் நீயே
காரார் குழலாள் திருத்தங்கும் மணிமார்பா
சரணம்
ஓராயிரம் பெயர்கள் பாராயணம் செய்து
மாறாத பக்தியுடன் மலரடி பணிந்தேன்
சீராளனே உந்தன் கடைக்கண்ணருள் தந்து
தீரா என் வினை தீர்த்து ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment