ஸ்ரீதேவியே ! நீண்ட தங்கத்தடியால் உயரத்தூக்கப் பெற்றதும்,பூர்ண சந்திரனின் பிம்பம் போன்றதும், முத்துக்களாலும் பல நிறங்கள் கொண்டரத்தினங்களாலும் அழகானதும், வெண்பட்டு சுற்றியதும், முத்துக்குஞ்சலங்கள் தொங்கவிட்டிருப்பதும், பல
நிறப் பூக்களால் அர்ச்சிக்கப்பெற்றதுமான குடையையும், நிலவு போல் வெண்மையுடன் உயரத்தூக்கப்பெற்ற சாமரங்களையும், தேவருலகப் பெண்கள் தாங்கி நிற்கின்றனர்.
பவனி வரும்…..
பல்லவி
பவனி வரும் அம்பிகையே உன் பாதம் பணிந்தேன்
சிவனில் பாதியே கேசவன் சோதரியே
அனுபல்லவி
தவயோகியர் முனிவர் ஞானியர் மற்றும்
அவனியோரனைவரும் பணிந்தேத்துமன்னையே
சரணம்
தங்கத் தடியேந்தும் அழகிய அணிமணி புனைந்த
முழுநிலவைப் பழிக்கும் வெண் பட்டுச் சுற்றிய
முத்துக்குஞ்சலம் தொங்கும் குடையும் சாமரமும்
ஏந்தி நிற்கும் தேவகுல மகளிருடன் காட்சி தரும்
No comments:
Post a Comment