Friday, 3 December 2021

பரதேவியுன்…..

 

अनाद्यन्ताभेदप्रणयरसिकापि प्रणयिनी
शिवस्यासीर्यत्त्वं परिणयविधौ देवि! गृहिणी ।
सवित्री भूतानामपि यदुदभूः शैलतनया
नदेतत्संसारप्रणयनमहानाटकसुखम् ॥ ६॥

ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

"அநாத்³யந்தாபே⁴த³ப்ரணயரஸிகாபி ப்ரணயினீ
ஶிவஸ்யாஸீர்யத்த்வம்ʼ பரிணயவிதௌ⁴ தே³வி க்³ருʼஹிணீ.
ஸவித்ரீ பூ⁴தாநாமபி யது³த³பூ: ஶைலதனயா
ததே³தத்ஸம்ʼஸாரப்ரணயனமஹாநாடகஸுக²ம்ʼ

-- தேவீ பஞ்சஸ்தவி(அம்பா ஸ்தவம்)

"ஓ!! தேவீ!! ஆதியந்தங்களுடைய ஒன்றிய நிலையிலே தோன்றும் வேட்கையிலே திளைத்திருப்பவள் நீ!! பின்பு ஶிவஶக்திகளாக பிரிந்த பின் பரமசிவனின் குடும்பத்தலைவியாய் விளங்குகின்றாய்!! ஸகல சராசரங்களுக்கும் தாயாரான நீ மலையரசனின் மகளாகவும் தோன்றினாய்!! இவையனைத்தும் உன்னுடைய ஸம்ஸாரம் எனும் ப்ரணயமஹாநாடகமன்றோ!?"
ஆத்யந்தங்களுடைய ஒன்றிய நிலையென்பது பூர்ண ப்ரஹ்மஸ்வரூபத்தைக் குறிப்பதாம்!! தேவீ உபநிஷத்தும் கூட அம்பாளை "ஞானானாம் சிந்மயாதீதா ஶூன்யானாம் ஶூன்ய ஸாக்ஷிணி" என்று கூறுகிறது. பரஞானத்திற்கும் அப்பாற்பட்ட பராஸம்வித் எனவும், ஶூன்ய ஸ்திதிக்கும் அப்பாற்பட்ட ஸாக்ஷியாகவும் ஶ்ரீபராம்பாள் விளங்குவதைக் கூறும்!! நிர்குணமான ப்ரஹ்மத்தில் தோன்றும் சலனமே காமகலை எனப்படும்!! அந்த காகலையின் ஸ்வரூபத்தையே இங்கு முதல் வரியில் "ஆத்யந்தங்களுடைய ஒன்றிய வேட்கை" என்று கூறப்பட்டது. 
பின்பு அக்காமகலையே காமேச்வரியாகவும், பின் காமேச்வரராகவும் தோன்றுவதை உபாக்யானமும், த்ரிபுரா ரஹஸ்யமும் கூறும்!! 
பூர்ணானந்த வடிவான ப்ரஹ்மம், உலகைத் தோற்றுவிக்கவேணும் என்ற இச்சையினால் காமகலையாகி, பின் ஶிவ ஶக்திகளாகப் பிரிந்தது. இதையே காமகலைக்கடுத்த நிலையில் ஶிவனின் க்ருஹிணியாக விளங்குவதாகச் சொன்னது. வாஸ்தவத்தில் ஶிவமும் அவளே, ஶக்தியும் அவளே!! இவ்வாறு கோடிட்டு வார்த்தைச் சிலம்பாடுவதால் உணரவியலாத ப்ரஹ்மமும் அவளே.
பின் லீலையாய் மலையரசனின் மகளாய்த் தோன்றினாள். உலகிற்கு அன்னையாய் விளங்கும் அவள் மலையரசனின் மகளாய்த் தோன்றியது என்ன வேடிக்கை!?.
மூவகைத் தத்துவங்கள் பொதிந்து விளங்கிய ஸ்தவம் இது
1) ஆதியில் நிஸ்சலன ப்ரஹ்மத்திலிருந்து அபரா காமகலையாய் வெளிப்ட்ட நிலை
2) பின்னர், ஶிவனது "ஆஹோ புருஷிகா" எனும் அஹங்கார நிலை. பரமஶிவனார் தன்னை உணர்வதற்கு காரணமான நிலை.
3) மலையரசனின் மகள். லீலையாய்த் தேவி தோற்றுவித்த மாயை எனும் திரஸ்கரணம் ஒடுங்கும் ஸ்தானம் ஹிமாலயம். அம்மாயை ஒடுங்கியபிறகே ஶ்ரீதேவியின் ஸாக்ஷாத்காரம் ஏற்படும். அதை உணர்த்தும் "உமா ஹைமவதி" எனும் நிலை. இம்மூன்று நிலைகளில் ஶ்ரீதேவீ லீலையாய் விளங்குகின்றாள். இவை மட்டும் அம்பாளின் ஸ்வரூபத்தைக் பூரணமாய்க் காட்டுமா என்றால் இல்லை!!  இத்தகைய ஸ்திதிகளைக் கடந்த அகண்டாகார வடிவிலே விளங்குபவள்.
மலையரசனின் மகள், பரமசிவனின் மனைவி, சிவசக்த்யைக்ய அபராகாமகலை என்பது லீலா மாத்ரமாத தேவீ நடத்தும் ஸம்ஸார நாடகம். ஸம்ஸார தோற்றத்திற்கான நாடகம்!! இத்தகைய நிலைகளைத் தாண்டி மனோவாக்கிற்கு அப்பாற்ப்பட்ட பரப்ரஹ்மவஸ்துவானவள் ஸாக்ஷாத் ஶ்ரீபராஶக்தி மஹாத்ரிபுரஸுந்தரி. சிந்தனைக்கெட்டாத ஸ்திதியிலே விளங்கும் ஶ்ரீகாமாக்ஷியையே சரணாகதி அடைவோம்!!
ஸர்வம் லலிதார்ப்பணம்காமாக்ஷி சரணம்

                                      பரதேவியுன்…..

                                                பல்லவி

                                 பரதேவியுன் லீலைகளைப் பாடித்துதித்தேன்
                                 அரனயனரி பணி கேசவன் சோதரி

                                               அனுபல்லவி

                                 பரம் பொருள் நீயே பரமேச்வரியே
                                 பரமேச்வரனின் பங்கிலுறைபவளே
         
                                                    சரணம்

                                 சிவசக்தி நீயே சிவனுடன் கூடியே
                                 காமகலையாகி காமேச்வரனுடன்
                                 ஈரேழுலகனைத்துமியற்கையும் படைத்தவளே
                                 மாமேருதனிலமர் மூவகைத்தத்துவமே

                                 மலையரசன் மகளே உமையே மாயே
                                 முத்தொழில் புரிந்திடும் மூவருக்கும் முதலே
                                 சிந்தனைக்கெட்டாத ஆதிபராசக்தியே
                                 ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே 
  
                                 
                                 

                                        

No comments:

Post a Comment