ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.
பொருள்:
சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.
.சங்கரர்……
பல்லவி
சங்கரர் துதித்த பங்கய பதத்தாளை சிங்கேரி சாரதையின் மலர்த்தாள் பணிந்தேன்
அனுபல்லவி
செங்கண்மால் கேசவன் தங்கையென விளங்கும்
மங்கல நாயகியை நெஞ்சார நினைந்து
சரணம்
அங்க சௌந்தர்யம் நிறைந்த ஈச்வரியை
வெங்கதிரோனொளியைப் பழிக்குமொளி உடையவளை
துங்கா நதி தீரத்தில் பொங்கும் எழிலோடு
துங்கா நதி தீரத்தில் பொங்கும் எழிலோடு
மங்காப் புகழ் விளங்க வீற்றிருப்பவளை
No comments:
Post a Comment