#பச்சைநாயகியம்மை_ஆசிரியவிருத்தம்
பாடல் 4:
வேதங்க ளோதிலென் னாகம முணர்ந்துமென் மேனி சருகா யுலர்ந்து
வெவ்விரத மாற்றிலென் பன்னதிக ளாடிலென் மென்மல நடந்து சென்று
காதங்கள் பலவானபூவலஞ் செய்துமென் கந்தமூ லங்கள் தின்று
காலங் கழிக்கிலென் முழைபுக்க மூடிகங் கடுப்ப வேகுகை புக்கிலென்
பூதங்கள் பணிதம் பனாதிகை வந்துமென் பூவுலகி லட்ட சித்தி
பூரண மதாயிலென் அன்னைநின் னருளினாற் போதமுற் றுன்னை யேத்திப்
பாதங்கள் வந்தனைசெயாராயின் முத்தியம் பதிவயிற் குறுக லெளிதோ
பச்சிளஞ் சோலைதிக ழுச்சிதப் பேரைவளர் பச்சை மரகதவல்லியே !!!
பேரூர் வளர்….
பல்லவி
பேரூர் வளர் பச்சை மரகதவல்லியே
ஆரூரன் தோழன் பட்டீச்வரன் துணையே
அனுபல்லவி
கார்வண்ண மேனியன் கேசவன் சோதரியே
பாரோர் புகழ்ந்தேத்தும் பர்வத குமாரியே
சரணம்
வேதங்களோதியும் ஆகமங்களறிந்தும்
காதங்கள் பல நடந்து திருத்தலங்கள் வலம் வந்தும்
வேதனை தரும் பல விரதங்கள் இருந்துமுன்
பாதம் பணியாத பக்தருக்கு என்ன பயன்!!
No comments:
Post a Comment