செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்-
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
திருமங்கையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீஆமருவியப்பன்பெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏🙏
செந்தாமரை மலரில் வாழ்கின்ற சீதேவியும், பூதேவியும் தனது இரண்டு திருவடிகளை வருடவும், மாமுனிவர்கள் புகழ்ந்து துதிக்க வும் அலைகள் நிரம்பிய திருப்பாற்கடலில் திருவனந்தாழ் வான் என்ற புள்ளிகளையுடைய பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொண்டிருக்கும் ஆச்சரியமான குணமுடைய வன் திருவழுந்துாரில் அர்ச்சை வடிவமாக எழுந்தருளி யுள்ளான்' என்கின்றார்.
அணி அழுந்தூர்….
பல்லவி
அணி அழுந்தூர் அரசே கேசவனே
பணிந்தேனுன் கமலமலர்க் கழலடியை தினமும்
அனுபல்லவி
பணிவுடன் திருமகளும் பூமகளுமுந்தன்
இணையடி வருட முனிவர்கள் தொழுது நிற்க
சரணம்
மறைநான்கும் வேள்விகளைந்தும் ஓதும்
அறவழி அந்தணரும் பிரமனும் பணிந்தேத்தும்
இறையோனே அரவின் அணைதுயின்ற மாயவனே
பிறவிப் பிணி நீக்கி ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment